_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

நிலா.... இன்று வந்த அதே நிலா!

நிலா.... இன்று வந்த அதே நிலா!

இந்த வருடம் நாம் கண்ட சூப்பர் நிலா.... நாள் 19-03-2011
சுட்டவன்
ஆ.ஞானசேகரன்...
இந்த நிலா இதற்குமுன் 1912ல் வந்ததாம்...... நிலா அதன் சுற்றுப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வந்ததால் அதன் அளவை விட 14% அதிகமாக தெரியும் என்று விஞ்ஞானிகள் சொல்லுகின்றார்கள்.... சாதாரணமாக நம் கண்களுக்கு தெரிவதில்லை.... அன்று நான் சுட்டப்படங்கள் உங்களுக்காக...





போட்டோவை சுற்றி கோடு போட (Make borders on photo)..

போட்டோவை சுற்றி கோடு போட (Make borders on photo with Photoshop )..

வணக்கம் நண்பர்களே!
போட்டோ எடுக்காத நபர்களே இல்லை என்றே சொல்லலாம், அந்த அளவிற்கு போட்டோ நம்மிடையே கலந்துள்ள ஒன்றாகிவிட்டது. அந்த போட்டோ சிறப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோரிடமும் இருக்கின்றது. அப்படி சிறப்பாக இருக்க போட்டொவை சுற்றி வண்ணக்கோடு போடுவதும் உண்டு. அப்படிப்பட்ட கோடு photoshop மூலம் போடுவதைப்பற்றி இங்கே பார்க்கலாம்.

1. முதலில் தேவையான போட்டொவை photoshop ல் திறந்துகொள்ள வேண்டும்.

2. பின்னர் Image => Canvas size ஐ அமுக்கவும்...

3. Canvas size ஐ அமுக்கியதும் கீழ்கண்ட விண்டோ திறக்கும்...


4. Canvas size விண்டோவில் new size ல் நீல அகலங்களை பூர்த்தி செய்யவும் பின் வண்ணத்தையும் தேர்வு செய்து ok கொடுத்தால் கீழ்யுள்ள படத்தை போல வண்ண கோடு கிடைக்கும்.....


மேலும் உங்களுடன்
ஆ.ஞானசேகரன்...
Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket