_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

என்னைப்போல் ஒருவன்...

என்னைப்போல் ஒருவன்...

என்னை நானே எடுத்த புகைப்படம், அதிலும் என்னைப்போல் ஒருவன் அருகில் இருப்பதாக. இந்த புகைப்படத்தில் நிறையவே சுதப்பல் இருக்கின்றது. ஒளியின் அமைப்பு சுத்தமாக சரியில்லை. சும்மா என் அறையில் இருக்கும் இடத்தை வைத்துக்கொண்டு எடுத்தால் இப்படி ஒரு தோற்றம். மேலும் வரும் காலங்களில் தவறுகளை திருத்திக்கொள்ளலாம்.

Tripod உதவியுடன் Portrait mode ல் self timer பயன் படுத்தி என்னை நானே இரண்டு படங்கள் எடுத்துக்கொண்டு Adobe Photoshop 7.0 ல் செலுத்தி இரண்டையும் இணைத்ததால் கிடைத்த புகைப்படம்தான் இது. சிறிது அலங்கார வெலைகள் செய்த பின் கிடைத்த முடிவு இந்த புகைப்படம்.. (படத்தின் மேல் அமுக்கி பெரிதாக பார்க்கலாம்)



******

பொதுவா தாவரங்கள் எப்பொழுதும் ஆகாயத்தை பார்த்துக்கொண்டே இருக்கும். அப்படி பார்க்கின்ற செடிகளுக்கு சலிப்பு வருவதில்லை என்றே நினைக்கின்றேன். அப்படி என்னதான் பார்க்கின்றது என்று நானும் பார்த்தேன். அப்படி பார்த்த இடம்தான் இந்த புகைப்படம் ( அலை பேசியில்
Portrait mode ல் காலை நேரத்தில் எடுத்தது)


அடுத்து சந்திப்போம்
ஆ.ஞானசேகரன்

27 comments:

tamiluthayam said...

நல்ல கற்பனை. நானும் முயற்சிக்கிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

// tamiluthayam said...

நல்ல கற்பனை. நானும் முயற்சிக்கிறேன்.//

உங்களின் வருகை மிக்க மகிழ்ச்சிங்க

S.A. நவாஸுதீன் said...

இரண்டு போட்டோவுமே நல்லா இருக்கு நண்பா.

முதலாவது டபுள் ஸ்பெசல்.

Muthu Kumar N said...

ஆ.ஞானசேகரன் அவர்களே,

என்னைப்போல் ஒருவன் என்று தலைப்பிட்டுவிட்டு
உங்களுக்குள் ஒருவன் ஒளிந்து கொண்டிருப்பதை
மறைமுகமாய் உணர்த்தியுள்ளீர்கள்.

இன்னும் தேடுங்கள் உங்களுக்குள்
இருப்பவனின் வெளிவராத திறமைகள் ஏராளம்
புதைந்து கிடப்பதை கண்டுபி்டித்து அதைவெளிக்கொணராமல்
கடந்துபோன கிழைமைகளும் ஏராளம்,

தாராளமாய் இந்த என்னைப்போல் ஒருவனின்
புகைப்படத்திற்காக பாரட்டலாம்.

வித்தியாசமான சிந்தனையும அதைனை லாவகமாய் செயல்படுத்திய விதமும்
நீங்கள் புதிய கேமரா வாங்கிய வேகத்தில் அதை அமுல்படுத்திய விதமும்
நீங்கள் பார்க்கும் கேமரா கோணங்களும் உங்கள் திறமையை பறைசாற்றும்
நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதுததான் மறுக்க முடியாத உண்மையாகும்.

வாழ்த்துகள், வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

ஆ.ஞானசேகரன் said...

//S.A. நவாஸுதீன் said...

இரண்டு போட்டோவுமே நல்லா இருக்கு நண்பா.

முதலாவது டபுள் ஸ்பெசல்.//

மிக்க நன்றி நண்பா,...

ஆ.ஞானசேகரன் said...

// ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

ஆ.ஞானசேகரன் அவர்களே,

என்னைப்போல் ஒருவன் என்று தலைப்பிட்டுவிட்டு
உங்களுக்குள் ஒருவன் ஒளிந்து கொண்டிருப்பதை
மறைமுகமாய் உணர்த்தியுள்ளீர்கள்.

இன்னும் தேடுங்கள் உங்களுக்குள்
இருப்பவனின் வெளிவராத திறமைகள் ஏராளம்
புதைந்து கிடப்பதை கண்டுபி்டித்து அதைவெளிக்கொணராமல்
கடந்துபோன கிழைமைகளும் ஏராளம்,

தாராளமாய் இந்த என்னைப்போல் ஒருவனின்
புகைப்படத்திற்காக பாரட்டலாம்.

வித்தியாசமான சிந்தனையும அதைனை லாவகமாய் செயல்படுத்திய விதமும்
நீங்கள் புதிய கேமரா வாங்கிய வேகத்தில் அதை அமுல்படுத்திய விதமும்
நீங்கள் பார்க்கும் கேமரா கோணங்களும் உங்கள் திறமையை பறைசாற்றும்
நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதுததான் மறுக்க முடியாத உண்மையாகும்.

வாழ்த்துகள், வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

அன்பின் முத்துக்குமார்
கொஞ்சம் அதிகமாக பாராட்டியுள்ளீர்கள்.. இருந்தாலும் உங்களின் எதிர்பார்ப்புக்கு நல்ல முயற்ச்சி எடுப்பேன் என்று நினைக்கின்றேன் .. மிக்க நண்பா...

cheena (சீனா) said...

அன்பின் ஞானசேகரன்

புதுக் கருவி - புதிய திறமையின் வெளிப்பாடு - படங்கள் நல்லாவே இருக்கு

நல்வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

//cheena (சீனா) said...
அன்பின் ஞானசேகரன்

புதுக் கருவி - புதிய திறமையின் வெளிப்பாடு - படங்கள் நல்லாவே இருக்கு

நல்வாழ்த்துகள்//


மிக்க நன்றி ஐயா,...
உங்களின் வாழ்த்துகள் கிடைக்க பேருபெற்றேன்....

ஹேமா said...

ஞானம் இரண்டு படங்களிலும் அழகும் உங்கள் திறமையும் அபாரம்.

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...
ஞானம் இரண்டு படங்களிலும் அழகும் உங்கள் திறமையும் அபாரம்//


வாங்க ஹேமா,.. உங்களின் பாராட்டு கிடைத்ததும் ஒரு புத்துணர்வே வருகின்றது. நன்றி ஹேமா...

பா.ராஜாராம் said...

its great segar!

ஆ.ஞானசேகரன் said...

// பா.ராஜாராம் said...

its great segar!//

மிக்க நன்றி நண்பா,..

Truth said...

http://memycamera.blogspot.com/2009/11/november-2009-vaandugal-pit.html

இதைப் பாருங்க. நீங்க டபுல் ரோல்னா நாங்க பல ரோல் :-)

ஆ.ஞானசேகரன் said...

// Truth said...

http://memycamera.blogspot.com/2009/11/november-2009-vaandugal-pit.html

இதைப் பாருங்க. நீங்க டபுல் ரோல்னா நாங்க பல ரோல் :-)//

அருமை பாஸ்

Jerry Eshananda said...

amazin,gnans.

ஆ.ஞானசேகரன் said...

//ஜெரி ஈசானந்தா. said...
amazin,gnans
//

Thank you sir

thiyaa said...

நல்லாயிருக்குது

ஆ.ஞானசேகரன் said...

// தியாவின் பேனா said...
நல்லாயிருக்குது//

மிக்க நன்றிங்க....

இராகவன் நைஜிரியா said...

அண்ணே உங்களைப் பார்த்து, அதுவும் இந்த வலைப்பூவை பார்த்து, நானும் சில படங்கள் போட்டு இருக்கேன்.

பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க

இராகவன் நைஜிரியா said...

லிங்க் கொடுக்க மறந்துட்டேன்... சாரி

http://raghavannigeria.blogspot.com/2009/12/blog-post.html

ஆ.ஞானசேகரன் said...

//இராகவன் நைஜிரியா said...
அண்ணே உங்களைப் பார்த்து, அதுவும் இந்த வலைப்பூவை பார்த்து, நானும் சில படங்கள் போட்டு இருக்கேன்.

பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க//

நண்பா,.... பார்த்தேன் ருசித்தேன்,,,, எல்லாமே கொள்ளையழகு. என் வலை உங்களை ஊக்கப்படுத்தியதில் மகிழ்ச்சியே!

மிக்க நன்றி நண்பா

Priya said...

உண்மையிலே ரொம்ப வித்தியாசமான சிந்தனை...அதில் உருவான 1st போட்டோ சூப்பர்!!!

ஆ.ஞானசேகரன் said...

// Priya said...
உண்மையிலே ரொம்ப வித்தியாசமான சிந்தனை...அதில் உருவான 1st போட்டோ சூப்பர்!!!//


மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்...

Anonymous said...

உங்களை போல் ஒருவரா? ஞானசேகரன் கலக்குறீங்க போங்க... இந்தியாவுக்கு வரும் போது போன் செய்யுங்க... எனக்கும் கத்துக்கொடுக்க.

ஆ.ஞானசேகரன் said...

//கடையம் ஆனந்த் said...
உங்களை போல் ஒருவரா? ஞானசேகரன் கலக்குறீங்க போங்க... இந்தியாவுக்கு வரும் போது போன் செய்யுங்க... எனக்கும் கத்துக்கொடுக்க.//


வணக்கம் நண்பா,... மிக்க நன்றிங்க... இந்த 24ம் தேதி திருச்சி வந்தால் அழையுங்கள் சந்திக்கலாம்

malar said...

ரொம்ப நல்ல பதிவுகள் ...

நிறைய விஷ்யங்கள் தெரிந்து வைத்து இருக்றேங்க.

ஆ.ஞானசேகரன் said...

// malar said...

ரொம்ப நல்ல பதிவுகள் ...

நிறைய விஷ்யங்கள் தெரிந்து வைத்து இருக்றேங்க.//


மிக்க நன்றிங்க
அடிக்கடி வாங்க நண்பா

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket