சென்ற பதிவில் "கால்பந்து விளையாட்டை நான் எப்படி புகைப்படம் எடுத்தேன்?" என்று என் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டேன். அவ்வாறு நான் ஏன் Manual mode ஐ தேர்வு செய்யாமல் Shutter Priority ஐ தேர்வு செய்தேன்?.....
Manual mode ல் கதவு நேரம் மற்றும் லென்சின் விட்டம் நாம் தேர்வு செய்ய வேண்டும் அப்படி தேர்வு செய்து எடுக்கும் பொழுது எடுக்க வேண்டிய நபர் ஓடிக்கொண்டே இருப்பதால் ஒளி அளவு மாறிவிடும் அப்படி மாறும் பொழுது லென்சின் விட்டம் சரியாக அமையாமல் புகைப்படம் இருட்டாகிவிடும் அல்லது படம் கலங்கலாக இருக்கும். ஆனால் Shutter Priority ல் நாம் கதவு நேரம் மட்டும் நிர்ணயக்க முடியும் லென்சின் விட்டத்தை கேமராவே எடுத்துக்கொள்ளும் அதனால் படம் தெளிவாக கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். எனவேதான் Shutter Priority ஐ தேர்வு செய்தேன்..... அப்படி அன்று நான் எடுத்த புகைப்படங்கள் சில இங்கு கொடுத்துள்ளேன்.. உங்கள் கருத்துகளையும், உங்களின் ஆலோசனைகளையும் சொல்லுங்கள்.....
Lighthouse photos
அன்புடன்
ஆ.ஞானசேகரன்....