_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

கண்ணால் கண்டதை விட...

கண்ணால் கண்டதை விட...

பணியிடத்தில் ஆண்டு இறுதியாகையால் வேலை அதிகமாகவே இருந்தது. புதிய புகைப்பட சாதணம் (Canon 5ooD) வாங்கியதிலிருந்து வெளியில் செல்ல முடியாமல் போய்விட்டது. வீட்டிற்கு வரும்பொழுதெல்லாம் கேமரா என்னைப்பார்த்து சிரிப்பதாகவே இருந்தது. எப்படியோ இன்று வெளியில் கேமராவுடன் செல்லவேண்டும் என்று புகைப்பட வேட்டைக்கு சென்றேன். ம்ம்ம்ம் உண்மையிலேயே ஒரு புதிய இனிமையான அனுபவம். நாம் நம் கண்களில் பார்ப்பதைவிட கேமரா கண்ணால் பார்க்கும் அழகே அழகுதான் போங்க... கேமராவிற்கு ஒரு கண் என்பதால் நல்லதை அப்படியே பதித்துவிடுகின்றது. பதித்த விடங்கள் உங்களோடு ஒரு பகிர்விற்கு சமர்ப்பணம். உங்களின் ஊக்கம் என்னை மேலும் உச்சாகப்படுத்தலாம்.

சுட்டது..
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

பிடித்த புகைப்படத்தின் மேல் அமுக்கி பெரிதாக பார்க்கலாம்





















































உங்களின் அன்புக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

என்னைப்போல் ஒருவன்...

என்னைப்போல் ஒருவன்...

என்னை நானே எடுத்த புகைப்படம், அதிலும் என்னைப்போல் ஒருவன் அருகில் இருப்பதாக. இந்த புகைப்படத்தில் நிறையவே சுதப்பல் இருக்கின்றது. ஒளியின் அமைப்பு சுத்தமாக சரியில்லை. சும்மா என் அறையில் இருக்கும் இடத்தை வைத்துக்கொண்டு எடுத்தால் இப்படி ஒரு தோற்றம். மேலும் வரும் காலங்களில் தவறுகளை திருத்திக்கொள்ளலாம்.

Tripod உதவியுடன் Portrait mode ல் self timer பயன் படுத்தி என்னை நானே இரண்டு படங்கள் எடுத்துக்கொண்டு Adobe Photoshop 7.0 ல் செலுத்தி இரண்டையும் இணைத்ததால் கிடைத்த புகைப்படம்தான் இது. சிறிது அலங்கார வெலைகள் செய்த பின் கிடைத்த முடிவு இந்த புகைப்படம்.. (படத்தின் மேல் அமுக்கி பெரிதாக பார்க்கலாம்)



******

பொதுவா தாவரங்கள் எப்பொழுதும் ஆகாயத்தை பார்த்துக்கொண்டே இருக்கும். அப்படி பார்க்கின்ற செடிகளுக்கு சலிப்பு வருவதில்லை என்றே நினைக்கின்றேன். அப்படி என்னதான் பார்க்கின்றது என்று நானும் பார்த்தேன். அப்படி பார்த்த இடம்தான் இந்த புகைப்படம் ( அலை பேசியில்
Portrait mode ல் காலை நேரத்தில் எடுத்தது)


அடுத்து சந்திப்போம்
ஆ.ஞானசேகரன்

நாங்களும் வாங்கிட்டோம்!...


எத்தனை நாட்களுக்கு அலைப்பேசியிலேயே புகைப்படம் எடுப்பது. நாமும் ஒரு புகைப்பட சாதணம் வாங்கலாம் என்று EOS 500D SLR கேமரா வாங்கியாச்சு. இனி கற்றுக்கொள்ள வேண்டியதுதான் பாக்கி. முறையாக இன்னும் பயிற்சி இல்லை என்றாலும் மாதிரியை பார்த்து சில புகைப்படங்களையும் எடுத்தாச்சு.

முதலில் Basic Zone ல் உள்ளவற்றை முயற்ச்சி செய்து Portrait mode ல் எடுத்தப்படம் ... கடைசிப்படம் Program AE (P) mode ல் ISO 32oo, whitebalance Auto ஏடுத்தது...... முயற்சிக்கு பலன் கிடைக்கும் என்று நம்புவோம்...





அன்புடன்.
ஆ.ஞானசேகரன்.




Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket