_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்
Showing posts with label அழகு. Show all posts
Showing posts with label அழகு. Show all posts

புகைப்படத்தில் Background (பின்ணனி)

புகைப்படத்தில் Background (பின்ணனி)

"சுவர் இருந்தால்தான் சித்திரம்" என்று சொல்லுவார்கள் அது போல ஒரு புகைப்படம் பார்ப்பவர்களை கவர்கின்றது என்றால் அதன் பின்புலமும் முக்கிய காரணியாக இருக்கும். அதனால்தான் புகைப்படம் எடுக்கும்பொழுது மிக முக்கியமாக கவணிக்க வேண்டியது அதன் பின்ணனி காட்சிகள். பின்ணனி காட்சிகளை படம் எடுக்கப்படும்பொழுது சரியாக அமையாவிட்டால் அதன் பின் காட்சிகளை "புகைப்படம் மென்பொருள்" மூலம் அதனை அழகுப்படுத்துவதும் உண்டு. அதற்கு பெரிதும் பயன் படுவது Adobe Photoshop என்ற மென்பொருள். அப்படி அழகுப்படுத்துவதை பற்றிய என் முந்தைய பதிவுகள்

புகைப்படத்தில் Blurred Background மற்றுமொரு உத்தி...
புகைப்படத்தில் Blurred Background (Average)....


மேலேயுள்ள சுட்டிகள் புகைப்படம் எடுத்த பின் அழகு படுத்துகின்ற உத்திகள். மேலும் பல பின்ணனி படங்களை சேர்ப்பதன் மூலமும் அழகுபடுத்தலாம். அப்படிப்பட்ட பின்ணனி படங்கள் இணையத்தில கொட்டிகிடக்கின்றது என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட பின்ணனி படங்களை பார்க்க கீழ்யுள்ள சுட்டியை சுட்டுங்களேன்.

பின்ணனி படங்கள்...


இந்த பகுதியில் புகைப்படம் எடுக்கும் பொழுதே பின்ணனியும் (Background) சிறப்பாக அமைய என்ன காரணிகள் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். Aperture லென்சின் விட்டத்தை பயன் படுத்தி பின்ணனியை சிறப்பாக்கலாம். அதே போல Shutter speed தேவையான அளவு அதிகப்படுத்தி சிறப்பாக எடுக்கலாம். Aperture value சிறிதாக்கி பின்ணனியை Blur ஆக்கலாம். அதேபோல் Shutter speed அதிகப்படுத்தும் பொழுதும் பின்ணனியை Blur ஆக்கலாம். மேற்கண்ட இரண்டு உத்திகளை விட சிறந்த ஒரு பின்ணனி (Background) என்னவென்றால் புகைப்படம் எடுக்கும் பொழுது நீர் நிலைகளையோ, ஆகாயத்தையோ பயன் படுத்தினால் சிறப்பாக இருக்கும். ஆகாயம் மற்றும் நீர்நிலைகளை போல சிறந்த பின்ணனி இல்லை என்றே சொல்லலாம். அதே போல தூரத்து இருள், தூரத்து பச்சையும் நன்றாக இருக்கும். இப்படி மேற்கண்ட உத்திகளை பயன்படுத்தி நான் எடுத்த புகைப்படங்கள் கீழே கொடுத்துள்ளேன்..... மேலும் விளக்கங்கள் தேவையெனில் பின்னூட்டங்களில் சொல்லுங்களேன்....


அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

என்னைப்போல் ஒருவன்...

என்னைப்போல் ஒருவன்...

என்னை நானே எடுத்த புகைப்படம், அதிலும் என்னைப்போல் ஒருவன் அருகில் இருப்பதாக. இந்த புகைப்படத்தில் நிறையவே சுதப்பல் இருக்கின்றது. ஒளியின் அமைப்பு சுத்தமாக சரியில்லை. சும்மா என் அறையில் இருக்கும் இடத்தை வைத்துக்கொண்டு எடுத்தால் இப்படி ஒரு தோற்றம். மேலும் வரும் காலங்களில் தவறுகளை திருத்திக்கொள்ளலாம்.

Tripod உதவியுடன் Portrait mode ல் self timer பயன் படுத்தி என்னை நானே இரண்டு படங்கள் எடுத்துக்கொண்டு Adobe Photoshop 7.0 ல் செலுத்தி இரண்டையும் இணைத்ததால் கிடைத்த புகைப்படம்தான் இது. சிறிது அலங்கார வெலைகள் செய்த பின் கிடைத்த முடிவு இந்த புகைப்படம்.. (படத்தின் மேல் அமுக்கி பெரிதாக பார்க்கலாம்)



******

பொதுவா தாவரங்கள் எப்பொழுதும் ஆகாயத்தை பார்த்துக்கொண்டே இருக்கும். அப்படி பார்க்கின்ற செடிகளுக்கு சலிப்பு வருவதில்லை என்றே நினைக்கின்றேன். அப்படி என்னதான் பார்க்கின்றது என்று நானும் பார்த்தேன். அப்படி பார்த்த இடம்தான் இந்த புகைப்படம் ( அலை பேசியில்
Portrait mode ல் காலை நேரத்தில் எடுத்தது)


அடுத்து சந்திப்போம்
ஆ.ஞானசேகரன்
Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket