_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

பசுமைக்கு பஞ்சமில்லை சுட்டவை..... ( Singapore Botanical garden 29.09.2010)

பசுமைக்கு பஞ்சமில்லை சுட்டவை..... ( Singapore Botanical garden 29.09.2010)

பச்சை நிறத்தை பார்ப்பதற்கு நம்முடைய கண்கள் எப்பொழுதுமே கூச்சப்பட்டதில்லை. ஆனால் அந்த பசுமையை பேணி வளர்க்கபடுகின்றோமா? அந்த பசுமையின் உன்னதத்தை நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கின்றோமா? என்றால் இல்லை. Play station, computer என்று வாங்கி கொடுத்து அதில் விளையாட சொல்லி கொடுத்து பெறுமை படும் அளவிற்கு இயற்கையோடும் பசுமையோடும் விளையாட சொல்லிக் கொடுப்பதுமில்லை, விடுவதுமில்லை.

நான் சிறுவனாய் இருக்கும் பொழுது ஆடி, ஆவணி மாதங்களில் வீட்டு தோட்டத்தில் அவரை, சுரை, பூசனி, தக்காளி , மிளகாய் விதைகளை இட்டு தினமும் தண்ணிர் ஊற்றி தினம் காலையில் எழுந்ததும் அதன் வளர்ச்சியை கண்டால் ஆணந்தம் வருமே! அந்த ஆணந்தம் அந்த குதுகுலம் நம் பிள்ளைகளுக்கு இருக்கின்றதா? காலையில் computer மதியம் play station மாலையில் கட்டாய படிப்பு இப்படியே அவர்களையும் நாம் வேலைசெய்யும் கணனியாகவே பயன்படுத்திவிட்டோம். இன்றோ அவர்களால் சிறு தோல்விகளை கூட சந்திக்க திரண் அற்றவர்களாக இருக்கின்றார்கள். உலகை பற்றிய சிந்தனை அவர்களுக்கு துளிகூட இல்லை. இந்த பூமியில் நான்கில் மூன்று பகுதி நீரால் சூழப்பட்டாலும் நமக்கு தேவையான நன்னீரின் அளவு சிறிதுதான். அதாவது 1% முதல் 2% வரைதான். பெருகிவரும் மக்கள் தொகை நன்னீரின் தேவை பற்றாகுறையாகவே இருக்கின்றது. போதா குறைக்கு இருக்கின்ற மரம் செடிகளை வெட்டி வீனாக்குவதே வேலையாகின்றது. என்றாவது ஒரு நாள் நம் கைகளால் ஒரு மரம் ஒரு செடி வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றதா? இந்த சுற்றுசூழல்கள் எல்லாம் இந்த மரம் செடிகளால் தான் தூய்மை படுத்தப்படுகின்றது, என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கின்றதா? அதனை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி தந்ததுண்டா?... இந்த பசுமையான எண்ணங்களை நம் பிள்ளைகளுக்கு விட்டு செல்லவில்லை என்றால் நாளைய உலகம் பூம்ம்ம்ம்ம்ம்ம்தான். ( "ஒரு நாள் இந்த பூமாதேவி சிரிப்பாள் நாமேல்லாம் போகவேண்டியதுதான், இது காமடியில்லை உண்மை")

உண்மைதான் நம் வாழ்க்கையில் சில மரங்களையாவது விட்டு செல்வோம். இல்லை நாங்கள் நகரங்களில் இருக்கின்றோம் என்றால் தோட்டிகளிலாவது செடிகளை வளர்க்க முயற்சி செய்வோம்.... நீங்கள் வளர்க்கும் மரம் செடிகள் நாளைய உலகிற்கு ஆணிவேர்.

"பசுமையை நாளைய சந்னதினருக்கும் கொண்டு செல்வோம்....." முதல் இரண்டு படங்கள் அதைதான் சொல்லுகின்றது. சுட்ட படங்களேல்லாம் சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா (Singapore Botanical garden).சுட்டவன்....
அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.

பூக்களை கிள்ளாதே! சுட்டவை.... National orchid garden Singapore 28.09.2010

பூக்களை கிள்ளாதே! சுட்டவை.... National orchid garden Singapore 28.09.2010

பூக்கள் என்றாலே ஒரு தனி அழகுதான் போங்க. பூக்களை பார்த்ததும் பலருக்கு பூவை கிள்ளி மோகர்ந்து பார்க்கனும்போல ஆசை வரும். ஆனால் ஒன்றுங்க அழகா இருக்கின்ற பூக்கள் எல்லாம் நறுமனத்துடன் இருப்பதில்லை. அது போல நறுமனத்துடன் இருக்கும் பூக்கள் எல்லாம் அழகுன்னு சொல்லவும் முடியாது. ( பெண்களில் அழகும் குணமும் போல)..... பூக்களில் எல்லா மனமும் நமக்கு பிடிக்கும் என்றும் சொல்லவும் முடியாது. அதனாலே என்னெவோ பெண்களை பூவோடு உவமைப்படுத்தி அந்த காலமுதல் சொல்லியுள்ளார்கள். எந்த பூ உங்களுக்கு பிடிக்கின்றது என்று நீங்களே சொல்லுங்கள். அதற்கு மனமுண்டு என்று என்னால் சொல்ல முடியாது. அதற்கு பொருப்பு நீங்கள்தான். இங்கே கொடுக்கப்பட்ட படங்களின் அளவுகள் 15% தான். உங்களுக்கு அதன் முழுமையான அளவிற்கு தேவை என்றால் மின்னஞ்சல் செய்யுங்கள் அனுப்பி வைக்கப்படும்... இன்னும் சில படங்கள் அடுத்த பதிவில் வரும்...சுட்டவன்....
அன்புடன்,

ஆ.ஞானசேகரன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video