வணக்கம் நண்பர்களே!
Pit குழுவினர் நடத்திய "வளர்ப்பு பிராணிகள்" புகைப்பட போட்டியில் எனது புகைப்படமும் பத்தில் ஒன்று தேர்வாகியுள்ள மகிழ்ச்சியை உங்களோடு பகிர்கின்றேன். சுட்டியை சுட்டி பார்க்கலாம் செப்டம்பர் மாதப்போட்டி - முதல் பத்து வளர்ப்புப் பிராணிகள்
இந்த பதிவில் Adobe Photoshop மூலம் புகைப்படத்தை lens correction மற்றும் match color மூலம் அழகு படுத்துவதை பற்றி பார்க்கலாம். பொதுவாக புகைப்படம் எடுக்கும் பொழுது ஒளி மற்றும் சூழல்கள் முக்கியம். பல சமையங்களில் அப்படிப்பட்ட சூழ்நிலைக்காக காத்திருக்க வேண்டி வரும். சில சமயம் புகைப்படம் நாம் எதிர்ப்பார்க்கும் அளவிற்க்கு இருக்காது. அப்படிப்பட்ட சமயங்களில் நமக்கு பெரிதும் உதவுவது போட்டோசாப் மென்பொருள்தான்.
கீழ்யுள்ள படத்தை கவணியுங்கள்,... இது ஒரு மாலை பொழுதில் உயரமான கட்டிடங்கள் உள்ள இடத்தை புகைப்படம் எடுத்தேன். (இடம்: சிங்கப்பூர் ராபில்ஸ் பிளேஸ்)

முதலில் புகைப்படத்தை Adobe Photoshop ல் திறக்கவும். ஒரு லேயர் நகல் எடுத்துக்கொள்வது நல்லது. பின்னர் Filter -> Distort -> Lens correction ஐ தேர்வு செய்யவும்

இப்பொழுது கீழ்கண்ட மற்றொரு விண்டோ வரும். இந்த விண்டோவை பயன் படுத்தி lens correction செய்யலாம். transform பட்டனை நகர்த்தி சரிப்பன்னவும். பின்னர் அந்த விண்டோவில் கீழ் உள்ள பகுதியில் Edge Extension ஐ தேர்வு செய்து ok கொடுக்கவும்.

இப்பொழுது சாய்வாக இருந்த கட்டிடம் கொஞ்சம் நிமிர்ந்து இருக்கும். பின்னர் Filter -> Render -> Lens Flare தேர்வு செய்யவும். ஒரு சிறிய விண்டோ திறக்கும் அதில் நமக்கு தேவையான இடத்தில் ஒளி வட்டத்தை வைத்து ok கொடுக்கவும். நாம் நினைத்த ஒளியுடன் கூடிய புகைப்படம் தெரியும்... இன்னும் மஞ்சள் வெயிலாக தோற்றம் கொள்ள Match color செய்ய வேண்டும்..

இப்பொழுது என்னிடம் உள்ள மஞ்சள் வெயில் கொண்ட புகைப்படம் ஒன்றையும் Adobe Photoshop ல் திறந்துக்கொண்டேன். தற்பொழுது இரண்டு புகைப்படம் இருக்கும்..

பின்னர் கீழேயுள்ள புகைப்படத்தை கவணியுங்கள். முதல் படத்தை தேர்வு செய்துக்கொண்டு Image -> Adjustments -> Mach color ஐ தேர்வு செய்யவும்.

அப்படி தேர்வு செய்ததும் கீழ்யுள்ள படம் போல ஒரு விண்டோ திறக்கும். அந்த விண்டோவில் கீழே கவணித்தால் Source என்ற இடத்தில் இரண்டாவது புகைப்படத்தின் எண்ணை தேர்வு செய்து ok கொடுக்கவும். இப்பொழுது இரண்டாவது புகைப்படத்தின் நிறம் நாம் செய்ய வேண்டிய முதல் படத்தில் இருக்கும். அதை மேலும் மெருகேற்றி அழகுப்படுத்தலாம்.

கீழேயுள்ள புகைப்படம்தான் நமக்கு தேவையான படம். புகைப்படத்தை பெரிதாக பார்க்க அவற்றில் மேல் தட்டவும்....

அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.
4 comments:
தேவையான விஷயம் சொல்லியிருக்கிறீர்கள் ஞானம்.
அருமையான விளக்கம் ஞர்னசேகரன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
//ஹேமா said...
தேவையான விஷயம் சொல்லியிருக்கிறீர்கள் ஞானம்.//
மிக்க நன்றிங்க ஹேமா
//வேலன். said...
அருமையான விளக்கம் ஞர்னசேகரன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.//
நன்றிங்க வேலன்
Post a Comment