_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்
Showing posts with label adobe photoshop. Show all posts
Showing posts with label adobe photoshop. Show all posts

போட்டோவை சுற்றி கோடு போட (Make borders on photo)..

போட்டோவை சுற்றி கோடு போட (Make borders on photo with Photoshop )..

வணக்கம் நண்பர்களே!
போட்டோ எடுக்காத நபர்களே இல்லை என்றே சொல்லலாம், அந்த அளவிற்கு போட்டோ நம்மிடையே கலந்துள்ள ஒன்றாகிவிட்டது. அந்த போட்டோ சிறப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோரிடமும் இருக்கின்றது. அப்படி சிறப்பாக இருக்க போட்டொவை சுற்றி வண்ணக்கோடு போடுவதும் உண்டு. அப்படிப்பட்ட கோடு photoshop மூலம் போடுவதைப்பற்றி இங்கே பார்க்கலாம்.

1. முதலில் தேவையான போட்டொவை photoshop ல் திறந்துகொள்ள வேண்டும்.

2. பின்னர் Image => Canvas size ஐ அமுக்கவும்...

3. Canvas size ஐ அமுக்கியதும் கீழ்கண்ட விண்டோ திறக்கும்...


4. Canvas size விண்டோவில் new size ல் நீல அகலங்களை பூர்த்தி செய்யவும் பின் வண்ணத்தையும் தேர்வு செய்து ok கொடுத்தால் கீழ்யுள்ள படத்தை போல வண்ண கோடு கிடைக்கும்.....


மேலும் உங்களுடன்
ஆ.ஞானசேகரன்...

Adobe Photoshop ல் "Magic wand tool" ஐ பற்றி ஒரு கண்ணோட்டம் மற்றும் ஒரு பயிற்சி பாடம் ஒலியும் ஒளியில்...

Adobe Photoshop ல் "Magic wand tool" ஐ பற்றி ஒரு கண்ணோட்டம் மற்றும் ஒரு பயிற்சி பாடம் ஒலியும் ஒளியில்...

வ ணக்கம் நண்பர்களே!
Adobe Photoshop ல் Magic wand tool ஐ பற்றி தற்பொழுது பார்ப்போம். இந்த டூலும் புகைப்படத்தில் தேவையான பகுதியை தேர்வு செய்யும் டூல்தான். pen tool லை போல நமக்கு தேவையான பகுதியை தேர்வு செய்ய பயன்படுத்தப்படுகின்றது. இந்த டூல் color தேர்வு முறைப்படி வேலை செய்கின்றது. ஒரே வகையான நிறத்தை தேர்வு செய்யும். இவற்றை பயன் படுத்தி நமக்கு தேவையான பகுதியை தேர்வு செய்து. தேர்வான பகுதியை தேவையான இடத்தில் பொருத்தி அழகுப்படுத்தலாம். அவ்வாறு அழகுபடுத்திய பயிற்சியும் இங்கே ஒலியும் ஒளியும் அமைப்பில் கொடுத்துள்ளேன்.


மேற்கண்ட புகைப்படம் சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தை பயிற்சிக்காக எடுத்துக்கொள்வோம். இந்த படத்தில் தாயும் சேயும் உள்ள சிலையை மட்டும் தேர்வு செய்து பின்னர் வேறு ஒரு புகைப்படமாக அழகுபடுத்தியுள்ளேன். இதன் செயல் விளக்கம் ஒலி ஒளி வடிவில் கீழ்யுள்ள சுட்டியில் உள்ளது. இவற்றை தறமிரக்கி ஓட்டி பார்க்கவும். exe. வடிவில் உள்ளதால் player தேவையில்லை. ம்ம்ம்ம்ம் சுட்டியை சுட்டுங்கள்

Adobe Photoshop ல் "Magic wand tool" ஐ பற்றி ஒரு கண்ணோட்டம் மற்றும் ஒரு பயிற்சி பாடம்


மேற்கண்டவாறு தேர்வு செய்து அழகுப்படுத்திய புதிய புகைப்படம்தான் கீழேயுள்ளது. பிடிந்திருந்தால் சொல்லிட்டு போங்க நண்பர்களே!



அன்புடன்,
ஆ,ஞானசேகரன்.....

Adobe Photoshop ல் பென் (Pen Tool) டூலை பற்றி ஒரு கண்ணோட்டம் ஒலியும் ஒளியில்...

Adobe Photoshop ல் பென் (Pen Tool) டூலை பற்றி ஒரு கண்ணோட்டம் ஒலியும் ஒளியில்...

வணக்கம் நண்பர்களே!
பென்(Pen Tool) பற்றி பதிவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, நேரம் இல்லா காரணங்களால் பதிவிட முடியாமல் போனது. நமது வலை நண்பருக்கு பென் டூலை பயன்படுத்தும் பொழுது ஏற்ப்பட்ட சந்தேகங்களை மின்னஞ்சல் மூலம் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு மின்னஞ்சலில் பதில் சொல்லிவிட்டேன். இருப்பினும் இன்னும் பலருக்கு இதுபோல சந்தேகம் இருக்கலாம். எனவேதான் இந்த பதிவை கொடுக்கின்றேன். நானும் இன்னும் முழுமை பெறா பயிற்சியாளன் என்பதால் உங்களோடு சேர்ந்து பயிற்சி பெற முடியும் என்ற ஆசையால் இந்த பகிர்வுகள்.


புகைப்படத்தில் தேவையான பகுதியை தேர்வு செய்ய முக்கியமான அதிலும் துள்ளியமான டூல் என்னவென்றால் என்னை பொருத்தவரை பென் டூல் தான். இவற்றை பயன்படுத்த கொஞ்சம் பயிற்சி வேண்டும். பழகிவிட்டால் இதைவிட சுலபம் வேறு இல்லை என்றே சொல்லலாம். விளக்கும் விதம் எழுத்தை விட ஒலியும் ஒளி அமைப்பில் இருந்தால் நல்லாயிருக்கும் என்ற எண்ணத்தில் ஒலி ஒளியுடம் பதிவு செய்துள்ளேன். அவற்றை பார்க்க கீழ்கண்ட சுட்டியை சுட்டி பதிவிறக்கம் செய்து play பன்னி பார்க்கவும். .exe கோப்பு என்பதால் இதனை play பன்ன player தேவையில்லை...

Pen Tool பற்றிய ஒரு கண்ணோட்டம் ஒலியும் ஒளியும்....

சிரமங்கள் இருந்தால் தாராளமாக சொல்லுங்கள் மாற்றியமைக்க முயற்சி செய்கின்றேன்.

அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.



Adobe Photoshop மூலம் புகைப்படத்தை lens correction மற்றும் match color மூலம் அழகு படுத்த.....

Adobe Photoshop மூலம் புகைப்படத்தை lens correction மற்றும் match color மூலம் அழகு படுத்த....

வணக்கம் நண்பர்களே!
Pit குழுவினர் நடத்திய "வளர்ப்பு பிராணிகள்" புகைப்பட போட்டியில் எனது புகைப்படமும் பத்தில் ஒன்று தேர்வாகியுள்ள மகிழ்ச்சியை உங்களோடு பகிர்கின்றேன். சுட்டியை சுட்டி பார்க்கலாம் செப்டம்பர் மாதப்போட்டி - முதல் பத்து வளர்ப்புப் பிராணிகள்


இந்த பதிவில் Adobe Photoshop மூலம் புகைப்படத்தை lens correction மற்றும் match color மூலம் அழகு படுத்துவதை பற்றி பார்க்கலாம். பொதுவாக புகைப்படம் எடுக்கும் பொழுது ஒளி மற்றும் சூழல்கள் முக்கியம். பல சமையங்களில் அப்படிப்பட்ட சூழ்நிலைக்காக காத்திருக்க வேண்டி வரும். சில சமயம் புகைப்படம் நாம் எதிர்ப்பார்க்கும் அளவிற்க்கு இருக்காது. அப்படிப்பட்ட சமயங்களில் நமக்கு பெரிதும் உதவுவது போட்டோசாப் மென்பொருள்தான்.

கீழ்யுள்ள படத்தை கவணியுங்கள்,... இது ஒரு மாலை பொழுதில் உயரமான கட்டிடங்கள் உள்ள இடத்தை புகைப்படம் எடுத்தேன். (இடம்: சிங்கப்பூர் ராபில்ஸ் பிளேஸ்)


மாலை பொழுதில் சிறிய வெயில் உள்ள நிலையில் எடுத்தாலும் அதன் ஆகாய அமைப்பும் மற்றும் கலரும் சரியாக அமையவில்லை. அதே போல புகைப்படம் எடுக்கப்பட்ட தூரம் மிக அருகில் என்பதால் அதன் உயரத்தை சரியாக எடுக்க முடியாமல் கேமராவை தூக்கி வைத்தாற்போல எடுக்கப்பட்டுள்ளது. அதனால் கட்டிடங்கள் சாய்வாக தெரிகின்றது. மேலே சொன்ன குறைகளை ஓரளவிற்கு சரிசெய்து அழகுப்படுத்த போட்டோசாப் மென்பொருள் உதவும். அவற்றைப் பற்றி பார்க்கலாம். மேற்கண்ட புகைப்படத்தை காலை மஞ்சள் வெயிலில் எடுத்து போல செய்யலாம்.......

முதலில் புகைப்படத்தை Adobe Photoshop ல் திறக்கவும். ஒரு லேயர் நகல் எடுத்துக்கொள்வது நல்லது. பின்னர் Filter -> Distort -> Lens correction ஐ தேர்வு செய்யவும்



இப்பொழுது கீழ்கண்ட மற்றொரு விண்டோ வரும். இந்த விண்டோவை பயன் படுத்தி lens correction செய்யலாம். transform பட்டனை நகர்த்தி சரிப்பன்னவும். பின்னர் அந்த விண்டோவில் கீழ் உள்ள பகுதியில் Edge Extension
ஐ தேர்வு செய்து ok கொடுக்கவும்.



இப்பொழுது சாய்வாக இருந்த கட்டிடம் கொஞ்சம் நிமிர்ந்து இருக்கும். பின்னர் Filter -> Render -> Lens Flare தேர்வு செய்யவும். ஒரு சிறிய விண்டோ திறக்கும் அதில் நமக்கு தேவையான இடத்தில் ஒளி வட்டத்தை வைத்து ok கொடுக்கவும். நாம் நினைத்த ஒளியுடன் கூடிய புகைப்படம் தெரியும்... இன்னும் மஞ்சள் வெயிலாக தோற்றம் கொள்ள Match color செய்ய வேண்டும்..




இப்பொழுது என்னிடம் உள்ள மஞ்சள் வெயில் கொண்ட புகைப்படம் ஒன்றையும் Adobe Photoshop ல் திறந்துக்கொண்டேன். தற்பொழுது இரண்டு புகைப்படம் இருக்கும்..



பின்னர் கீழேயுள்ள புகைப்படத்தை கவணியுங்கள். முதல் படத்தை தேர்வு செய்துக்கொண்டு Image -> Adjustments -> Mach color ஐ தேர்வு செய்யவும்.


அப்படி தேர்வு செய்ததும் கீழ்யுள்ள படம் போல ஒரு விண்டோ திறக்கும். அந்த விண்டோவில் கீழே கவணித்தால் Source என்ற இடத்தில் இரண்டாவது புகைப்படத்தின் எண்ணை தேர்வு செய்து ok கொடுக்கவும். இப்பொழுது இரண்டாவது புகைப்படத்தின் நிறம் நாம் செய்ய வேண்டிய முதல் படத்தில் இருக்கும். அதை மேலும் மெருகேற்றி அழகுப்படுத்தலாம்.



கீழேயுள்ள புகைப்படம்தான் நமக்கு தேவையான படம். புகைப்படத்தை பெரிதாக பார்க்க அவற்றில் மேல் தட்டவும்....

பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க,.... சந்தேகம், தவறு இருந்தால் சொல்லுங்கள்...

அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.

புகைப்படத்தில் Background (பின்ணனி)

புகைப்படத்தில் Background (பின்ணனி)

"சுவர் இருந்தால்தான் சித்திரம்" என்று சொல்லுவார்கள் அது போல ஒரு புகைப்படம் பார்ப்பவர்களை கவர்கின்றது என்றால் அதன் பின்புலமும் முக்கிய காரணியாக இருக்கும். அதனால்தான் புகைப்படம் எடுக்கும்பொழுது மிக முக்கியமாக கவணிக்க வேண்டியது அதன் பின்ணனி காட்சிகள். பின்ணனி காட்சிகளை படம் எடுக்கப்படும்பொழுது சரியாக அமையாவிட்டால் அதன் பின் காட்சிகளை "புகைப்படம் மென்பொருள்" மூலம் அதனை அழகுப்படுத்துவதும் உண்டு. அதற்கு பெரிதும் பயன் படுவது Adobe Photoshop என்ற மென்பொருள். அப்படி அழகுப்படுத்துவதை பற்றிய என் முந்தைய பதிவுகள்

புகைப்படத்தில் Blurred Background மற்றுமொரு உத்தி...
புகைப்படத்தில் Blurred Background (Average)....


மேலேயுள்ள சுட்டிகள் புகைப்படம் எடுத்த பின் அழகு படுத்துகின்ற உத்திகள். மேலும் பல பின்ணனி படங்களை சேர்ப்பதன் மூலமும் அழகுபடுத்தலாம். அப்படிப்பட்ட பின்ணனி படங்கள் இணையத்தில கொட்டிகிடக்கின்றது என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட பின்ணனி படங்களை பார்க்க கீழ்யுள்ள சுட்டியை சுட்டுங்களேன்.

பின்ணனி படங்கள்...


இந்த பகுதியில் புகைப்படம் எடுக்கும் பொழுதே பின்ணனியும் (Background) சிறப்பாக அமைய என்ன காரணிகள் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். Aperture லென்சின் விட்டத்தை பயன் படுத்தி பின்ணனியை சிறப்பாக்கலாம். அதே போல Shutter speed தேவையான அளவு அதிகப்படுத்தி சிறப்பாக எடுக்கலாம். Aperture value சிறிதாக்கி பின்ணனியை Blur ஆக்கலாம். அதேபோல் Shutter speed அதிகப்படுத்தும் பொழுதும் பின்ணனியை Blur ஆக்கலாம். மேற்கண்ட இரண்டு உத்திகளை விட சிறந்த ஒரு பின்ணனி (Background) என்னவென்றால் புகைப்படம் எடுக்கும் பொழுது நீர் நிலைகளையோ, ஆகாயத்தையோ பயன் படுத்தினால் சிறப்பாக இருக்கும். ஆகாயம் மற்றும் நீர்நிலைகளை போல சிறந்த பின்ணனி இல்லை என்றே சொல்லலாம். அதே போல தூரத்து இருள், தூரத்து பச்சையும் நன்றாக இருக்கும். இப்படி மேற்கண்ட உத்திகளை பயன்படுத்தி நான் எடுத்த புகைப்படங்கள் கீழே கொடுத்துள்ளேன்..... மேலும் விளக்கங்கள் தேவையெனில் பின்னூட்டங்களில் சொல்லுங்களேன்....


அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket