வணக்கம் நண்பர்களே!
பென்(Pen Tool) பற்றி பதிவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, நேரம் இல்லா காரணங்களால் பதிவிட முடியாமல் போனது. நமது வலை நண்பருக்கு பென் டூலை பயன்படுத்தும் பொழுது ஏற்ப்பட்ட சந்தேகங்களை மின்னஞ்சல் மூலம் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு மின்னஞ்சலில் பதில் சொல்லிவிட்டேன். இருப்பினும் இன்னும் பலருக்கு இதுபோல சந்தேகம் இருக்கலாம். எனவேதான் இந்த பதிவை கொடுக்கின்றேன். நானும் இன்னும் முழுமை பெறா பயிற்சியாளன் என்பதால் உங்களோடு சேர்ந்து பயிற்சி பெற முடியும் என்ற ஆசையால் இந்த பகிர்வுகள்.

புகைப்படத்தில் தேவையான பகுதியை தேர்வு செய்ய முக்கியமான அதிலும் துள்ளியமான டூல் என்னவென்றால் என்னை பொருத்தவரை பென் டூல் தான். இவற்றை பயன்படுத்த கொஞ்சம் பயிற்சி வேண்டும். பழகிவிட்டால் இதைவிட சுலபம் வேறு இல்லை என்றே சொல்லலாம். விளக்கும் விதம் எழுத்தை விட ஒலியும் ஒளி அமைப்பில் இருந்தால் நல்லாயிருக்கும் என்ற எண்ணத்தில் ஒலி ஒளியுடம் பதிவு செய்துள்ளேன். அவற்றை பார்க்க கீழ்கண்ட சுட்டியை சுட்டி பதிவிறக்கம் செய்து play பன்னி பார்க்கவும். .exe கோப்பு என்பதால் இதனை play பன்ன player தேவையில்லை...
Pen Tool பற்றிய ஒரு கண்ணோட்டம் ஒலியும் ஒளியும்....
சிரமங்கள் இருந்தால் தாராளமாக சொல்லுங்கள் மாற்றியமைக்க முயற்சி செய்கின்றேன்.
அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.



