_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

அடடேய்....

நண்பர் ஒருவர் தினமும் சிங்கப்பூரில் சில பூனைகளுக்கு உணவழிப்பார். ஒரு நாள் நானும் அதை பார்த்துள்ளேன். அவர் அந்த இடத்திற்கு சென்று ஏதொ ஒரு பெயரை சொல்லி அழைப்பார். அங்குள்ள பூனையும் துள்ளி ஓடிவந்து அவர் காலை சுற்றி சுற்றி வரும். அவற்றை பார்த்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

முன்பு ஒருநாள் என் அலைப்பேசில் சில பூனைகளின் படமும் சுட்டது 20-11-2009 சுட்டது... சிங்கையில் பூனைக்குட்டி . நேற்று பணிக்கு சென்றுக்கொண்டிருந்தேன், அப்பொழுது யாரோ என்னை கூப்பிட்டதுபோல இருந்தது. திரும்பிப் பார்த்தேன் ம்ம்ம்ம் அதே மியாவ்... என்று அழைத்தது அந்த பூனை. என்னிடம் பழகியதுபோல என்னைப் பார்த்து அழைத்தது. அதை விட அது அமர்ந்து இருந்த ஆசனம் என்னை கவர்ந்ததால் அலைப்பேசியில் கிளிக்... கிளிக்... கிளிக்... கிளிக்................ அந்த சுட்டப்படங்களின் பகிர்வு,....

இதையும் படித்து பாருங்கள் இயற்கை இயற்கையாக!....







அலைப்பேசி படங்கள்
ஆ.ஞானசேகரன்.

புல்வெளிப் புல்வெளி புல்வெளி...

புல்வெளிப் புல்வெளி புல்வெளி...






சுட்டது
அலைபேசியில் ஆ.ஞானசேகரன்

பூவே பூச்சூடவா!....

இது ஒரு பூக்களின் அணிவகுப்பு













20-11-2009 சுட்டது... சிங்கையில் பூனைக்குட்டி

20-11-2009 சுட்டது... சிங்கையில் பூனைக்குட்டி

சிங்கப்பூரில் பூனைக்குட்டியும் சீனக்குட்டியும் வழியில் வந்தாலும் நகராது என்று ஒரு பேச்சுக்கு நண்பர்கள் சொல்வதுண்டு. அட ஆமாங்க அந்த அளவிற்கு பூனைகள் மனிதர்களை பார்த்து பயந்து ஓடுவதில்லை ( உட்கார்ந்து புகைப்படம் எடுத்துள்ளதை பார்த்தாலே தெரியுது).

பொதுவாக நாய்கள் வெளியில் இங்கு வளர்வதில்லை ஆனால் பூனைகளை பார்க்க முடியும். பூனை மற்றும் நாய் வீட்டில் வளர்க்க வேண்டும் என்றால் அரசாங்கத்தின் அனுமதி வேண்டும். அதற்காக அந்த பூனை மற்றும் நாயின் மருத்துவ சான்றிதழும் கொடுக்க வேண்டும். அதே போல் பக்கத்து வீட்டுக்காரர்கள் புகார் இருந்தால் வளர்க்க முடியாது. பல வீடுகளில் பூனை வளர்க்கப்படுவதை பார்க்க முடியும். சிங்கப்பூரில் பூனைக்காக ஒரு காப்பகமும் இயங்கிவருகின்றது. உணவு கடைகளில் பூனைகள் வராமல் பார்த்துக்கொள்ளப்படுகின்றது. அப்படி வரும் பூனைகளை அரசு சார்பு நிருவனத்தினர் பிடித்து செல்கின்றனர். சார்ஸ் நோய் வந்த நேரத்தில் பல பூனைகளை சாகடிக்கப்பட்டதாக தெரிகின்றது. அனுமதி வழங்கிய பூனைகளுக்கு எலக்ரானிக் சிப் காதுமடல்களில் வைக்கப்பட்டு இருக்கும். இதில் அந்த பூனைப்பற்றிய விவரங்கள் மற்றும் பூனையின் உரிமையாளர் பற்றியும் விவரம் இருக்கும். காணாமல் போகும் பூனையை கண்டுபிடிக்க இந்த முறை எளிதாக இருக்கின்றதாக சொல்லுகின்றார்கள்.

கீழே நான் பார்த்த பூனைகளின் கிரிச்... கிரிச்... படங்கள் (அலைப்பேசியின் உபயம்)









சுட்டது.
ஆ.ஞானசேகரன்.

19-11-2009 சுட்டது... பாதைகள்

19-11-2009 சுட்டது... பாதைகள்

என்னதான் அழகழகா சாலைகள் போட்டாலும் நடந்து செல்லுபவர்கள் அவற்றின் அருகே ஒரு குறுக்கு பாதை போட்டுவிடுவார்கள். எறும்பு ஊற கல்லும் தேய்ந்துவிடும் என்பதை போல மனிதன் நடந்து புல்லும் பட்டுவிடும். மனிதன் நடந்து நடந்து அந்த இடத்தில் புல்லும் வளராது, அப்படியே பல்லமாக போய்விடும். அப்படிதான் சிங்கப்பூரிலும் குறுக்காக நடந்து ஆங்காங்கே பாதைகளும் போட்டுவிடுவார்கள். இவ்வாறு உருவாகும் பாதைகளை இங்கே அரசும் தடுப்பதில்லை மாறாக அங்கே ஒரு நடைப்பாதை பொட்டு கொடுப்பார்கள்..... அப்படி போடப்பட்ட நடைப்பாதை புகைப்படங்கள்தான் கீழே கதை சொல்லுகின்றது. அப்படி போட்ட நடைப்பாதைக்கு அருகில் மற்றொரு குறுக்கு பாதையை உருவாக்கப்படும் என்பது மனிதனின் மற்றொரு வேடிக்கை.








அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

15-11-2009 சுட்டது... சீனர்களின் காலண்டர் ஆண்டு

ஆங்கில ஆண்டுகள், தமிழ் ஆண்டுகளை போலவே சீனர்களுக்கும் பனிரண்டு ஆண்டுகள் இருக்கு. இவைகள் ஒவ்வொன்றும் விலங்குகளின் பெயர்களை கொண்டுள்ளது. அவைகள் எந்தந்த ஆண்டுகள் வரும் என கணிக்கப்பட்டுள்ளது. அவைகளின் சிலைகள் என் அலைபேசியின் கண்ணில் பட்டது கிளிக்........
1.எலி ஆண்டு
2.எருது ஆண்டு
3.புலி ஆண்டு
4.முயல் ஆண்டு
5.கடல்நாகம் ஆண்டு
6.பாம்பு ஆண்டு
7.குதிரை ஆண்டு
8.வெள்ளாடு ஆண்டு
9.குரங்கு ஆண்டு
10.சேவல் ஆண்டு
11.நாய் ஆண்டு
12.பன்றி ஆண்டு

இப்படி ஆண்டுகளைப்பற்றி இந்த சிலைகள் சொல்லுகின்றது. மேலும் எந்தந்த ஆண்டுகள் வரும் என்ற குறிப்பும் உள்ளது படத்தில் மேல் சுட்டி பெரிதாக்கி பார்க்கவும். இந்த ஆண்டு எருது ஆண்டாக இருக்கின்றது... படம் சொல்லும் செய்திக்கு போவோம்...















13-11-2009 சுட்டது...

கண்ணில் பட்டதை சுட்டது...




12-11-2009 சுட்டது...

கேமரா கண்களுக்கு இயற்கை எந்த அளவிற்கு குளிர்ச்சியோ அதேபோல் பறக்கும் பறவைகளும்...... சிங்கப்பூர் பறவைகள் பூங்காவில் ... சில புகைப்படம்













Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket