_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

20-11-2009 சுட்டது... சிங்கையில் பூனைக்குட்டி

20-11-2009 சுட்டது... சிங்கையில் பூனைக்குட்டி

சிங்கப்பூரில் பூனைக்குட்டியும் சீனக்குட்டியும் வழியில் வந்தாலும் நகராது என்று ஒரு பேச்சுக்கு நண்பர்கள் சொல்வதுண்டு. அட ஆமாங்க அந்த அளவிற்கு பூனைகள் மனிதர்களை பார்த்து பயந்து ஓடுவதில்லை ( உட்கார்ந்து புகைப்படம் எடுத்துள்ளதை பார்த்தாலே தெரியுது).

பொதுவாக நாய்கள் வெளியில் இங்கு வளர்வதில்லை ஆனால் பூனைகளை பார்க்க முடியும். பூனை மற்றும் நாய் வீட்டில் வளர்க்க வேண்டும் என்றால் அரசாங்கத்தின் அனுமதி வேண்டும். அதற்காக அந்த பூனை மற்றும் நாயின் மருத்துவ சான்றிதழும் கொடுக்க வேண்டும். அதே போல் பக்கத்து வீட்டுக்காரர்கள் புகார் இருந்தால் வளர்க்க முடியாது. பல வீடுகளில் பூனை வளர்க்கப்படுவதை பார்க்க முடியும். சிங்கப்பூரில் பூனைக்காக ஒரு காப்பகமும் இயங்கிவருகின்றது. உணவு கடைகளில் பூனைகள் வராமல் பார்த்துக்கொள்ளப்படுகின்றது. அப்படி வரும் பூனைகளை அரசு சார்பு நிருவனத்தினர் பிடித்து செல்கின்றனர். சார்ஸ் நோய் வந்த நேரத்தில் பல பூனைகளை சாகடிக்கப்பட்டதாக தெரிகின்றது. அனுமதி வழங்கிய பூனைகளுக்கு எலக்ரானிக் சிப் காதுமடல்களில் வைக்கப்பட்டு இருக்கும். இதில் அந்த பூனைப்பற்றிய விவரங்கள் மற்றும் பூனையின் உரிமையாளர் பற்றியும் விவரம் இருக்கும். காணாமல் போகும் பூனையை கண்டுபிடிக்க இந்த முறை எளிதாக இருக்கின்றதாக சொல்லுகின்றார்கள்.

கீழே நான் பார்த்த பூனைகளின் கிரிச்... கிரிச்... படங்கள் (அலைப்பேசியின் உபயம்)

சுட்டது.
ஆ.ஞானசேகரன்.

14 comments:

துளசி கோபால் said...

படங்கள் நல்லா இருக்குதுங்க.

இந்த எலெக்ட்ரானிக்ஸ் சிப்ஸ் வைப்பது இங்கே நியூஸியில் ஒரு ஆப்ஷந்தான்.

நாய்க்கு மட்டுமே லைசன்ஸ் வாங்கணும். பூனைகள் ஜாலியாத்தான் இருக்குதுங்க. வீட்டுக்குக் குறைஞ்சது ரெண்டு;-)

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் அம்மா,... இங்கேயும் கண்டிப்பு இல்லை ஒரு ஆப்ஷந்தான்.. ஆனால் பலர் வைத்துள்ளார்கள். ஆனால் கண்டிப்பாக அனுமதி பெறவேண்டும்...

சி. கருணாகரசு said...

மியாவ் படங்கள் ... தகவல்கள் அருமை.

ராமலக்ஷ்மி said...

பூனையார் படங்கள் அழகு:)!
தகவல்களுக்கு நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

// சி. கருணாகரசு said...

மியாவ் படங்கள் ... தகவல்கள் அருமை.//

மிக்க நன்றி நண்பா,...

ஆ.ஞானசேகரன் said...

//ராமலக்ஷ்மி said...

பூனையார் படங்கள் அழகு:)!
தகவல்களுக்கு நன்றி.//

வணக்கம்,...
உங்களின் ஊக்கம் எனக்கு மகிழ்வு..
நன்றிங்க

அகநாழிகை said...

ஞானசேகரன்,
பதிவு அருமை. 2008ல் காலச்சுவடில் ஒரு சிறுகதையை வாசித்தேன். அதில் சிங்கையில் பூனைகள் அதிகமிருப்பதை வர்ணித்து கதை போகும். அதை மீள் நினைவுபடுத்தியது உங்கள் பதிவு. பகிர்வுக்கு நன்றி.

- பொன்.வாசுதேவன்

ஆ.ஞானசேகரன் said...

// அகநாழிகை said...

ஞானசேகரன்,
பதிவு அருமை. 2008ல் காலச்சுவடில் ஒரு சிறுகதையை வாசித்தேன். அதில் சிங்கையில் பூனைகள் அதிகமிருப்பதை வர்ணித்து கதை போகும். அதை மீள் நினைவுபடுத்தியது உங்கள் பதிவு. பகிர்வுக்கு நன்றி.

- பொன்.வாசுதேவன்//

வணக்கம் வாசு... உங்களின் வருகை மகிழ்ச்சியே....
மிக்க நன்றி வாசு..
அடிக்கடி சந்திப்போம்

ஜெகதீசன் said...

நல்லா இருக்கு.....

ஆ.ஞானசேகரன் said...

// ஜெகதீசன் said...

நல்லா இருக்கு.....//


வணக்கம் ஜெகா,.. மிக்க நன்றிபா

திகழ் said...

ஒளிப்படங்கள் அத்தனையும் அருமை நண்பரே

மனிதனை மட்டும் பார்க்க கூடிய இந்த மாதிரியான நாடுகளில் வசிப்பிடங்களில் வாயில்லா சீவன்களும் பார்ப்பது எத்தனை நல்லதாக இருக்கிறது நண்பரே

இடுகையில் உள்ள பூனைகள் எல்லாம் நான் நாளும் என் பிளாக்கிற்குக் கீழ் பார்க்கும் பூனைகள் மாதிரி உள்ளன. :)))))))


அன்புடன்
திகழ்

ஆ.ஞானசேகரன் said...

// திகழ் said...
ஒளிப்படங்கள் அத்தனையும் அருமை நண்பரே

மனிதனை மட்டும் பார்க்க கூடிய இந்த மாதிரியான நாடுகளில் வசிப்பிடங்களில் வாயில்லா சீவன்களும் பார்ப்பது எத்தனை நல்லதாக இருக்கிறது நண்பரே

இடுகையில் உள்ள பூனைகள் எல்லாம் நான் நாளும் என் பிளாக்கிற்குக் கீழ் பார்க்கும் பூனைகள் மாதிரி உள்ளன. :)))))))


அன்புடன்
திகழ்//

முற்றிலும் உண்மைங்க திகழ்... உங்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கின்றது

pattapatti said...

நல்லா சுடுகிறீர்கள் அப்பு..

ஆ.ஞானசேகரன் said...

// pattapatti said...

நல்லா சுடுகிறீர்கள் அப்பு..//

மிக்க நன்றி கண்ணு

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video