_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான கால் பந்து போட்டி 2013 (புகைப்படம்)

இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான  கால் பந்து போட்டி 2013 (புகைப்படம்)

மாநில அளவிலான கால்பந்து போட்டி 2013  இரண்டாம் ஆண்டாக  திருச்சி  துப்பாக்கித்தொழிற்சாலை  அகநகரில்  நணபர்கள் குழு  சிறப்பாக நடத்தி முடித்தது.  நேற்று அதன் இறுதி போட்டி பார்வையாளர்களின் கரகோசத்துடன் இனிதே முடிந்தது.  இந்த போட்டிகள்  நான்கு நாட்களாக நடைப்பெற்றது.    நான்கு நாட்கள் 16  மிக சிறந்த அணிகள் விளையாடினார்கள்.  அதன் இறுதி சுற்றில்  திருச்சி வளனார் கல்லூரி அணியும் சிதம்பரம் விளையாட்டு துறை அணியும்  மோதிக்கொண்டது  (இந்த அணியை நிர்வகிப்பவர் இந்திய கால்பந்தாட்ட வீரர் திரு. ராமன் விஜயன் அவர்கள்)   இறுதி சுற்றில்  சிதம்பரம் விளைட்டு துறையினர் வெற்றிபெற்று  பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்றனர். 

இந்த நான்கு நாட்களின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்  அடுத்தடுத்து பதிவேற்றுகின்றேன்.   ஒரு சில புகைபடங்கள்  .....   இங்கே

உங்கள் எண்ணங்களை பின்னூட்டங்களின் சொல்லுங்கள்  

அன்புடன்
ஆ.ஞானசேகரன் 
Lighthouse studio
Trichy

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video