சிங்கப்பூரில் பூனைக்குட்டியும் சீனக்குட்டியும் வழியில் வந்தாலும் நகராது என்று ஒரு பேச்சுக்கு நண்பர்கள் சொல்வதுண்டு. அட ஆமாங்க அந்த அளவிற்கு பூனைகள் மனிதர்களை பார்த்து பயந்து ஓடுவதில்லை ( உட்கார்ந்து புகைப்படம் எடுத்துள்ளதை பார்த்தாலே தெரியுது).
பொதுவாக நாய்கள் வெளியில் இங்கு வளர்வதில்லை ஆனால் பூனைகளை பார்க்க முடியும். பூனை மற்றும் நாய் வீட்டில் வளர்க்க வேண்டும் என்றால் அரசாங்கத்தின் அனுமதி வேண்டும். அதற்காக அந்த பூனை மற்றும் நாயின் மருத்துவ சான்றிதழும் கொடுக்க வேண்டும். அதே போல் பக்கத்து வீட்டுக்காரர்கள் புகார் இருந்தால் வளர்க்க முடியாது. பல வீடுகளில் பூனை வளர்க்கப்படுவதை பார்க்க முடியும். சிங்கப்பூரில் பூனைக்காக ஒரு காப்பகமும் இயங்கிவருகின்றது. உணவு கடைகளில் பூனைகள் வராமல் பார்த்துக்கொள்ளப்படுகின்றது. அப்படி வரும் பூனைகளை அரசு சார்பு நிருவனத்தினர் பிடித்து செல்கின்றனர். சார்ஸ் நோய் வந்த நேரத்தில் பல பூனைகளை சாகடிக்கப்பட்டதாக தெரிகின்றது. அனுமதி வழங்கிய பூனைகளுக்கு எலக்ரானிக் சிப் காதுமடல்களில் வைக்கப்பட்டு இருக்கும். இதில் அந்த பூனைப்பற்றிய விவரங்கள் மற்றும் பூனையின் உரிமையாளர் பற்றியும் விவரம் இருக்கும். காணாமல் போகும் பூனையை கண்டுபிடிக்க இந்த முறை எளிதாக இருக்கின்றதாக சொல்லுகின்றார்கள்.
கீழே நான் பார்த்த பூனைகளின் கிரிச்... கிரிச்... படங்கள் (அலைப்பேசியின் உபயம்)
சுட்டது.
ஆ.ஞானசேகரன்.



