திணை என்றால் நிலம், நமது முன்னோர்கள் நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து பிரிவாக பிரித்துள்ளனர்.
அதாவது.....
மலையும் மலைச்சார்ந்த இடம் குறிஞ்சி...
காடும் காடு சார்ந்த இடம் முல்லை...
வயலும் வயல் சார்ந்த இடம் மருதம்...
கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல்...
மணலும் மணல் சார்ந்த இடம் பாலை என பிரித்துள்ளார்கள். இங்கு நான் சுட்ட புகைப்படம் மலையும் மலைச்சார்ந்த இடம். சிங்கப்பூரில் உள்ள புக்கிட் பாத்தோக், மற்றும் புக்கிட் கோம்பாக் இங்குதான் மலைகள் இருப்பதாக எனக்கு தெரிகின்றது. புக்கிட் என்றால் மாலாய் மொழியில் மலை என்று பொருள். பாத்தோக் என்றால் மலாய் மொழியில் தென்னை தோட்டம் என்ற பொருள்.... மலைகளில் உள்ள தென்னை தோட்டம் என்ற பொருளில் அழைக்கப்படும் இடம் புக்கிட் பாத்தோக் (Bukit Bathok). தற்பொழுது தென்னை தோட்டங்கள் இல்லை மாறாக அடுக்கு மாடி குடியிருப்புகள் இருக்கின்றது. இருந்தாலும் அந்த மலையும் மலைச்சார்ந்த இடமும் பராமரித்து வருகின்றார்கள். இந்த இடம் இயற்கையான சூழலில் இருக்கும் குடியிருப்புகள். நல்ல காற்றோட்டம் உள்ள இடம். அதே போல கோம்பாக் என்றால் மலாய் மொழியில் சேகரிப்பு (collation of somthing) என்ற பொருள். புக்கிட் கோம்பாக்(Bukit Gombak) என்றால் மலைகளின் சேகரிப்பு என்ற பொருள் கொள்ளலாம். இந்த இடமும் இயற்கை சுழல்கொண்ட இடம். கீழ்கண்ட புகைப்படங்கள் அங்குதான் எடுக்கப்பட்டது.......
மேலேயுள்ள புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். இது போன்ற இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வந்தால் நல்லது என்ற எண்ணங்கள் இருக்கலாம். கவலைவிடுங்கள் அதற்கான வாய்ப்பு உங்களை தேடி வந்துள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...... ஆழ்ந்து சிந்தித்து கருத்தாய்வு செய்தவையை எழுதி அனுப்பினால் போதும்.
அட ஆமாங்க ...........
சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி
சென்ற ஆண்டை போன்று இந்த ஆண்டும் “மணற்கேணி- 2010” சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதற்காண தலைப்புகள் மற்றும் விதிமுறைகளை பார்க்க கீழ்யுள்ள நிரலியை சுட்டுங்கள். தலைப்புகள் மூன்று பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவர் என மூவருக்கு சிங்கப்பூர் சென்று வர வாய்ப்புகள் உள்ளது. நிரலியை சுட்டுங்கள் தட்டி செல்லுங்கள் அறிய வாய்ப்பை..........
மணற்கேணி குழுவின் அனைத்து தகவல்களுக்கான இணைய தளம்
போட்டியில் இணைந்து பங்காற்றும் தமிழ்வெளி
மணற்கேணி குழுவின் வலைப்பூ
அனைத்து விதிமுறைகளை அறிய நிரலியை தட்டுங்கள்

அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.
எழுதுங்கள்! வெல்லுங்கள்!......