_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

ஏரிக்கரையும் சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளும் (சுட்டவை சிங்கப்பூர் ஏரிக்கரை 07.10.2010)

ஏரிக்கரையும் சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளும் (சுட்டவை சிங்கப்பூர் ஏரிக்கரை 07.10.2010)

சிங்கப்பூர் வந்து சென்றவர்களுக்கு பசுமைமாறா நினைவுகளாக இருப்பது பல இருந்தாலும். என்றுமே அவர்களின் நினைவிற்குள் வருவது சுற்றியுள்ள பசுமைகள்தான். எங்கு பார்த்தாலும் ஓங்கி வளர்ந்த மரங்கள் மற்றும் பச்சை பாய் விரித்தது போன்ற புள்வெளிகளும். இந்த பசுமைக்கு காரணங்கள் இங்குள்ள இயற்கை சூழல்கள் ஒரு புறமிருக்க அரசும் அதன் கடமையை செய்கின்றது. இங்குள்ள பூக்களை பறிப்பது சட்டப்படி குற்றமாகும். அதேபோல பராமிப்பின்றி வளரும் புல் புதர்களுக்கும் அனுமதியும் இல்லை. அப்படி வளரும் இடத்தின் நிர்வாகதிற்கு அபராதம் (தண்டம்) வசூலிக்கப்படும். சிங்கப்பூர் ஏரிக்கரை (Lake side) என்ற இடத்தின் சுற்றியுள்ள இடங்களை சுட்டுதள்ளிய சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்......



























மேலேயுள்ள புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். இது போன்ற இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வந்தால் நல்லது என்ற எண்ணங்கள் இருக்கலாம். கவலைவிடுங்கள் அதற்கான வாய்ப்பு உங்களை தேடி வந்துள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...... ஆழ்ந்து சிந்தித்து கருத்தாய்வு செய்தவையை எழுதி அனுப்பினால் போதும்.

அட ஆமாங்க
...........

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

சென்ற ஆண்டை போன்று இந்த ஆண்டும் “மணற்கேணி- 2010” சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதற்காண தலைப்புகள் மற்றும் விதிமுறைகளை பார்க்க கீழ்யுள்ள நிரலியை சுட்டுங்கள். தலைப்புகள் மூன்று பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவர் என மூவருக்கு சிங்கப்பூர் சென்று வர வாய்ப்புகள் உள்ளது. நிரலியை சுட்டுங்கள் தட்டி செல்லுங்கள் அறிய வாய்ப்பை..........

மணற்கேணி குழுவின் அனைத்து தகவல்களுக்கான இணைய தளம்

போட்டியில் இணைந்து பங்காற்றும் தமிழ்வெளி

மணற்கேணி குழுவின் வலைப்பூ

அனைத்து விதிமுறைகளை அறிய நிரலியை தட்டுங்கள்

Photobucket


அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.

எழுதுங்கள்! வெல்லுங்கள்!......

22 comments:

பழமைபேசி said...

சிங்கைப் பதிவர்களுக்கு வாழ்த்துகள்!!!

ஆ.ஞானசேகரன் said...

//பழமைபேசி said...

சிங்கைப் பதிவர்களுக்கு வாழ்த்துகள்!!!//

நன்றி நண்பா

கையேடு said...

ஆஹா எல்லா படமும் அருமையா பளிச்சுன்னு இருக்கு.

நீருக்கு மேலே பறக்கும் பறவை அட்டகாசமா வந்துருக்கு ஆனா பின்புலம் பறவையின் நிறத்துக்கு ஏத்த மாதிரி அமைஞ்சிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்.

ஆ.ஞானசேகரன் said...

//கையேடு said...
ஆஹா எல்லா படமும் அருமையா பளிச்சுன்னு இருக்கு.

நீருக்கு மேலே பறக்கும் பறவை அட்டகாசமா வந்துருக்கு ஆனா பின்புலம் பறவையின் நிறத்துக்கு ஏத்த மாதிரி அமைஞ்சிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்.
//

ஆமாங்க நண்பா,... நானும் அதைதான் நினைத்தேன்.... எதிர்ப்பாக்காத சாட்....

நன்றி நண்பா

மாதேவி said...

படங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது.

ஆ.ஞானசேகரன் said...

// மாதேவி said...

படங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது.//

வணக்கம் மாதேவி
மணற்கேணி 2010 கலந்துக்கொண்டு வெற்றிப்பெற வாழ்த்துகள்

அன்புடன்
ஆ.ஞான்சேகரன்

தமிழ் உதயம் said...

சிங்கப்பூர் பசுமை, கண்ணுக்கு இனிமை.

ஆ.ஞானசேகரன் said...

// தமிழ் உதயம் said...

சிங்கப்பூர் பசுமை, கண்ணுக்கு இனிமை.//

வாங்க நண்பா,... மிக்க நன்றிங்க

தருமி said...

பச்சைகளும், பறவையும் அழகு ...

ஆ.ஞானசேகரன் said...

// தருமி said...

பச்சைகளும், பறவையும் அழகு ...//


வணக்கம் ஐயா.... "மணற்கேணி 2010" உங்கள் தரப்பில் ஊக்கம் கொடுங்கள்...
2009 வெற்றியாளர் என்ற முறையில் ஏதாவது சொல்லுங்கள்

sakthi said...

அன்பு நண்பர் ஞானம் ,
அருமையான படங்கள் .படங்களில் உயிரோட்டம் சூப்பர் .
நட்புடன் ,
கோவை சக்தி

a said...

kannai parikkum pachai pasel padangal.......

ஆ.ஞானசேகரன் said...

// sakthi said...

அன்பு நண்பர் ஞானம் ,
அருமையான படங்கள் .படங்களில் உயிரோட்டம் சூப்பர் .
நட்புடன் ,
கோவை சக்தி//

வணக்கம் சக்தி..
மிக்க நன்றிங்க, மணற்கேணி 2010 ல் கலந்துகொள்ளுங்கள்

ஆ.ஞானசேகரன் said...

// வழிப்போக்கன் - யோகேஷ் said...

kannai parikkum pachai pasel padangal.......//

வணக்கம் நண்பா,..
உங்களின் வருகை மகிழ்ச்சி
அதேபோல் மணற்கேணி 2010 ல் கலந்துகொள்ளவும் ....

மிக்க நன்றிங்க

Muniappan Pakkangal said...

Nice pictures Gnanaseharan.

ஆ.ஞானசேகரன் said...

//Muniappan Pakkangal said...

Nice pictures Gnanaseharan.//

வணக்கம் சார், இந்த முறையும் கலந்துக்கொள்ளுங்கள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//நட்ற்பாசை..//
நப்பாசை தெரியும்; இந்த நட்ற்பாசை..;நட்பாசையோ?
நான் 1992 ல் 1 1/2 மாதம் சிங்கப்பூரில் இருந்தேன். அழகிய நகரம்..நாடு..அன்பான மக்கள்.
மறக்கமுடியாத பயணம்.
படங்கள் அழகு. கூகிளிலும் பார்த்து மகிழ்வேன்.

ஆ.ஞானசேகரன் said...

[[ யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//நட்ற்பாசை..//
நப்பாசை தெரியும்; இந்த நட்ற்பாசை..;நட்பாசையோ?
நான் 1992 ல் 1 1/2 மாதம் சிங்கப்பூரில் இருந்தேன். அழகிய நகரம்..நாடு..அன்பான மக்கள்.
மறக்கமுடியாத பயணம்.
படங்கள் அழகு. கூகிளிலும் பார்த்து மகிழ்வேன்.]]

வணக்கம் நண்பா,..
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்

எஸ்.கே said...

மிக அழகான சிறப்பான படங்கள்! அந்த பறவை மிகவும் நன்றாக உள்ளது!

S.Michael said...

கன்னுக்கு அழகான படங்கள். அருமை

ஆ.ஞானசேகரன் said...

//எஸ்.கே said...

மிக அழகான சிறப்பான படங்கள்! அந்த பறவை மிகவும் நன்றாக உள்ளது!//

வணக்கம் எஸ்.கே
மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// S.Michael said...

கன்னுக்கு அழகான படங்கள். அருமை//

உங்கள் வருகை மகிழ்ச்சிங்க

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket