_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

ஒரு மைனா,.... மைனாக்குருவி!......

ஒரு மைனா,.... மைனாக்குருவி!......

மைனாக்குருவியை பார்க்காதவர்கள் இருக்க முடியாது. காக்கைக்கு அடுத்தப்படியாக உலகெங்கிலும் இருக்கும் பறவை என்றால் அது மைனாதான். மைனா கருப்பு மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தில் இருப்பதால் அவ்வளவாக அழகு என்று சொல்லமாட்டார்கள்...... எனவே கேமரா கண்களுக்கு அதிகப்பச்சம் மாட்டுவதில்லை (தேன்ச்சிட்டுவை ஒப்பிடும்பொழுது). என் கண்ணில் பட்ட மைனாவின் சிலிர்க்கும் காட்சிதான் கீழேயுள்ள புகைப்படங்கள். மைனா சில நேரங்களில் தோகை விரித்தாடும் அந்த காட்சி என் கண்ணுக்கு சிக்கவில்லை, முடிந்தால் அடுத்த முறை பதிந்துவிடுகின்றேன்.








சின்ன சின்ன சேதி: காக்கை உலகெங்கிலும் இருக்கின்றது ஆனால் அந்தமான் தீவில் மட்டும் இல்லை. சிங்கப்பூரில் சுகாதாரம் மற்றும் சுத்தம் காரணமாக மட்டுப்படுத்தபட்டுள்ளது. பொதுவாக பறவை இனம் முட்டையிட்டு குஞ்சுப் பொரிக்கும் ஆனால் வவ்வால் குட்டி போட்டு பால் கொடுக்கும். வவ்வால் பழங்களை உண்ணும், பொதுவாக மரங்களில் தலைகீழாக தோங்கும் நிலையில் இருக்கும். (படம் பார்க்க).

மைனா மற்றும் காக்கைகள் மூலம் மனிதனுக்கு சில நோய்கள் பரவுகின்றதாக ஆய்வுகள் சொல்லப்படுகின்றது.

பொதுவாக பறவைகளுக்கு வேர்ப்பதில்லை ஏன் என்றால் பறவைகளுக்கு வேர்வை நாளங்கள் இல்லை. பறவைகளுக்கு அதன் அலகுதான் அழகும் ஆதாரமும்......


அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.

5 comments:

இராகவன் நைஜிரியா said...

// காக்கை உலகெங்கிலும் இருக்கின்றது ஆனால் அந்தமான் தீவில் மட்டும் இல்லை. //

காக்கைகள் நைஜிரியாவிலும் கிடையாதுங்க.

ஆ.ஞானசேகரன் said...

[[ இராகவன் நைஜிரியா said...
// காக்கை உலகெங்கிலும் இருக்கின்றது ஆனால் அந்தமான் தீவில் மட்டும் இல்லை. //

காக்கைகள் நைஜிரியாவிலும் கிடையாதுங்க.
]]

வணக்கம் அண்ணே!... அப்படிங்களா, மிக்க நன்றிங்க. ஏன் இல்லை விளக்க முடியுமா? புதிய செய்தியை அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி

இராகவன் நைஜிரியா said...

// ஏன் இல்லை விளக்க முடியுமா? புதிய செய்தியை அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி //

இந்த விஷயத்தை நான் ரொம்ப நாள் கவனித்தது இல்லை. தம்பி நேசமித்ரன் ஒரு தடவை “காகங்கள் அற்ற தேசத்தில்” கூறியபின் தான் கவனித்தேன் இங்கு காக்கைகள் இல்லை என்பதை.

நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது அவர் கூறிய காரணம்... நைஜிரியாவில் பொருட்கள் எதுவும் வீணாக்கப்படுவதில்லை (அ) தூக்கி எறியப் படுவதில்லை. அனைத்து பாவிக்கப்பட்டுவிடும். எங்கு மீதி இல்லையோ அங்கு காக்கைகள் இருக்காது என்றார்.

இது ஒரு விதத்தில் சரி என தோன்றுகின்றது. இந்த இரண்டு வருஷத்தில் சமையல் செய்தது எல்லாம் மீதி இல்லாமல் தீர்ந்துவிடுகின்றது. இந்தியாவில் இருந்த வரை இப்படி நடந்ததே இல்லை.

ஆ.ஞானசேகரன் said...

[[ இராகவன் நைஜிரியா said...
// ஏன் இல்லை விளக்க முடியுமா? புதிய செய்தியை அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி //

இந்த விஷயத்தை நான் ரொம்ப நாள் கவனித்தது இல்லை. தம்பி நேசமித்ரன் ஒரு தடவை “காகங்கள் அற்ற தேசத்தில்” கூறியபின் தான் கவனித்தேன் இங்கு காக்கைகள் இல்லை என்பதை.

நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது அவர் கூறிய காரணம்... நைஜிரியாவில் பொருட்கள் எதுவும் வீணாக்கப்படுவதில்லை (அ) தூக்கி எறியப் படுவதில்லை. அனைத்து பாவிக்கப்பட்டுவிடும். எங்கு மீதி இல்லையோ அங்கு காக்கைகள் இருக்காது என்றார்.

இது ஒரு விதத்தில் சரி என தோன்றுகின்றது. இந்த இரண்டு வருஷத்தில் சமையல் செய்தது எல்லாம் மீதி இல்லாமல் தீர்ந்துவிடுகின்றது. இந்தியாவில் இருந்த வரை இப்படி நடந்ததே இல்லை.]]


ஆகா,.... மிக்க நன்றிங்க நண்பர் இராகவன்

Anonymous said...

//பொதுவாக பறவை இனம் முட்டையிட்டு குஞ்சுப் பொரிக்கும் ஆனால் வவ்வால் குட்டி போட்டு பால் கொடுக்கும்.//

அருமையான பதிவு. ஒரே ஒரு விஷயம் - வௌவால் பறவை இனத்தை சார்ந்தது அல்ல என்பதை சற்று விளக்கி இருக்கலாம்

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket