புகைப்படம் எடுப்பது இயற்கையான ஒளியில் இயற்கையான செயலை எடுப்பது என்பது ஒரு அழகுதான். சில நேரங்களில் செயற்கையாக ஒளியூட்டி உள்ளரங்கில்(Studio) எடுப்பதும் ஒரு உத்திதான். அப்படி உள்ளரங்கில் எடுத்த சில படங்கள் உங்களின் பகிர்வுக்காக. சுட்டது சிங்கப்பூர் உள்ளரங்கில்.......சிங்கை அழகிகள். உள்ளரங்கு புகைப்படம் எடுப்பதை பற்றி பின்னர் ஒருநாளில் பகிரலாம் என்ற எண்ணம் உள்ளது.
புகைப்படம் மேலும் மெருகூட்ட உதவிய வேலன் சாருக்கு நன்றி வேலன்
ராத்திரியில சில காட்சிகளை பார்க்கின்ற பொழுது மிக அழகாக இருக்கும் அதை அப்படியே புகைப்படமாக எடுக்க ஆசைதான் அதற்கு முக்காலி (Tripod) கண்டிப்பாக தேவைப்படுகின்றது. ஆனால் பல நேரங்களில் முக்காலியை எடுத்து செல்வதில்லை (எடுத்து செல்வது சுலபமாக இல்லை அதனால்) முக்காலி இல்லாமல் அப்படிப்பட்ட காட்சிகளை எடுக்க வேண்டும் எப்படி?
ஏன் முக்காலி தேவைப்படுகின்றது? ராத்தியில் ஒளி குறைவாக இருக்கும் அந்த நிலையில் புகைப்படம் எடுக்க கதவு நேரம்(shutter speed) குறைவாக இருக்கவேண்டும். அதாவது கதவு திறந்து மூடும் நேரம் அதிகமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ராத்திரியில் ஒளி அனைத்தையும் சாதனம்(camera) உள்வாங்கும். கதவு நேரம் குறைவாக இருக்கும் பொழுது சாதனம் அசையாமல் இருக்க வேண்டும். அதற்காகதான் முக்காலி தேவைப்படுகின்றது.
கையில் எவ்வளவு நேரம் அசையாமல் பிடிக்க முடியும்? அது அவரவர் திறன்கேற்றபடி இருக்கலாம். ஆனால் 1/குவியதூரம்(Focal length) நேரம் வரை அதிர்வை தாங்க முடியும் என்று சொல்லலாம். உதாரணமாக 50MM குவியத்தூரத்தில் எடுத்தால் 1/50 sec. கைகளால் எடுக்க முடியும் எனலாம்...( சரியாக இருக்கும் என்றே நினைக்கின்றேன்)
நான் முக்காலி உதவியுடன் கீழேயுள்ள இரண்டும் புகைப்படங்களை எடுத்துள்ளேன். சிறப்பாக இருந்தால் பாராட்ட மறக்க வேண்டாம்.. ராத்திரி காட்சி புகைப்படம் அழகாகதான் இருக்கின்றது.... முக்காலி வேண்டுமே!
மேலேயுள்ள இரண்டு புகைப்படத்தையும் பார்த்தீர்கள்.... பாராட்டி ஒரு பின்னூட்டம் போட்டுருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். இப்போழுது கீழே இரண்டு புகைப்படம் அதே இடத்தில் அதே நேரத்தில் எடுக்கப்பட்டது. ஆனால் முக்காலி பயன்படுத்தவில்லை.... முக்காலி பயன்படுத்திய புகைப்படத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் தெரிகின்றது என்று கவணியுங்கள். வித்தியாசம் இருக்காலாம் ஆனாலும் ஒரு நல்ல புகைப்படம் பதிவு செய்த மகிழ்ச்சி இருக்கின்றது. முக்காலி இல்லாமல் எடுப்பது எப்படி? ...... புகைப்படத்தை பார்த்துவிட்டு கீழே வாருங்கள்...
Program priority F/4 1/3 Sec ISO 800 Exposure Compensation -0.7 step
Program priority F/4 1/4 Sec ISO 800 Exposure Compensation -0.7 step
மேலேயுள்ள புகைப்படத்தை பார்த்து இருப்பீர்கள் நன்றி. எப்படி இந்த ராத்திரி காட்சி எடுக்கப்பட்டது. சாதனத்தில்(camera) Programமோடில் வைத்து கொள்ளவும் . இந்த மோடில் கதவு நேரம் மற்றும் லென்சின் விட்டம் சாதனமே நிர்ணம் செய்துக்கொள்ளும் . இப்பொழுது நீங்கள் ராத்திரி புகைப்படத்திற்காக செய்ய வேண்டியது. ISO வை 800 வைக்கவும் பின் Exposure Compensation(ஒளி அளவு சமன்படுத்துதல்) -0.7 க்கு வைத்துக்கொள்ளவும். அதாவது உங்கள் சாதனத்தில் ஒளிசமன்படுத்துதல் மீட்டர் இருக்கும் அதில் மூன்று கோடுகள் எதிர்புறமாக வைக்கவும். அவ்வளவுதான் முக்காலி இல்லாமல் சுட்டுதள்ளுங்கள்.... உங்களின் தேவைகேற்ப ISO வை சிறிது கூட்டி குறைத்து முயற்சித்து பார்த்து ஒரு நல்ல செய்தியை சொல்லிவிட்டு செல்லுங்கள் நன்றீறீ...
கற்றுக்கொள்ளும் நிலையில் நான் இருப்பதால் முடிந்த அளவிற்கு சொல்லியுள்ளேன்.....
கண்டதும் சுட்டதும்வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..
நான் பிறந்தது தஞ்சை மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம், பாரதிராஜா பார்க்கவில்லை பார்த்திருந்தால் எங்கள் ஊருக்கு நடிகர்கள் வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான்.