ராத்திரியில சில காட்சிகளை பார்க்கின்ற பொழுது மிக அழகாக இருக்கும் அதை அப்படியே புகைப்படமாக எடுக்க ஆசைதான் அதற்கு முக்காலி (Tripod) கண்டிப்பாக தேவைப்படுகின்றது. ஆனால் பல நேரங்களில் முக்காலியை எடுத்து செல்வதில்லை (எடுத்து செல்வது சுலபமாக இல்லை அதனால்) முக்காலி இல்லாமல் அப்படிப்பட்ட காட்சிகளை எடுக்க வேண்டும் எப்படி?
ஏன் முக்காலி தேவைப்படுகின்றது? ராத்தியில் ஒளி குறைவாக இருக்கும் அந்த நிலையில் புகைப்படம் எடுக்க கதவு நேரம்(shutter speed) குறைவாக இருக்கவேண்டும். அதாவது கதவு திறந்து மூடும் நேரம் அதிகமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ராத்திரியில் ஒளி அனைத்தையும் சாதனம்(camera) உள்வாங்கும். கதவு நேரம் குறைவாக இருக்கும் பொழுது சாதனம் அசையாமல் இருக்க வேண்டும். அதற்காகதான் முக்காலி தேவைப்படுகின்றது.
கையில் எவ்வளவு நேரம் அசையாமல் பிடிக்க முடியும்? அது அவரவர் திறன்கேற்றபடி இருக்கலாம். ஆனால் 1/குவியதூரம்(Focal length) நேரம் வரை அதிர்வை தாங்க முடியும் என்று சொல்லலாம். உதாரணமாக 50MM குவியத்தூரத்தில் எடுத்தால் 1/50 sec. கைகளால் எடுக்க முடியும் எனலாம்...( சரியாக இருக்கும் என்றே நினைக்கின்றேன்)
நான் முக்காலி உதவியுடன் கீழேயுள்ள இரண்டும் புகைப்படங்களை எடுத்துள்ளேன். சிறப்பாக இருந்தால் பாராட்ட மறக்க வேண்டாம்.. ராத்திரி காட்சி புகைப்படம் அழகாகதான் இருக்கின்றது.... முக்காலி வேண்டுமே!
F/5.6 5 Sec
ISO 200
Exposure Compensation 0 step
F/8 13 Sec
ISO 100
Exposure Compensation 0 step
மேலேயுள்ள இரண்டு புகைப்படத்தையும் பார்த்தீர்கள்.... பாராட்டி ஒரு பின்னூட்டம் போட்டுருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். இப்போழுது கீழே இரண்டு புகைப்படம் அதே இடத்தில் அதே நேரத்தில் எடுக்கப்பட்டது. ஆனால் முக்காலி பயன்படுத்தவில்லை.... முக்காலி பயன்படுத்திய புகைப்படத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் தெரிகின்றது என்று கவணியுங்கள். வித்தியாசம் இருக்காலாம் ஆனாலும் ஒரு நல்ல புகைப்படம் பதிவு செய்த மகிழ்ச்சி இருக்கின்றது. முக்காலி இல்லாமல் எடுப்பது எப்படி? ...... புகைப்படத்தை பார்த்துவிட்டு கீழே வாருங்கள்...
F/4 1/3 Sec
ISO 800
Exposure Compensation -0.7 step
F/4 1/4 Sec
ISO 800
Exposure Compensation -0.7 step
மேலேயுள்ள புகைப்படத்தை பார்த்து இருப்பீர்கள் நன்றி. எப்படி இந்த ராத்திரி காட்சி எடுக்கப்பட்டது. சாதனத்தில்(camera) Programமோடில் வைத்து கொள்ளவும் . இந்த மோடில் கதவு நேரம் மற்றும் லென்சின் விட்டம் சாதனமே நிர்ணம் செய்துக்கொள்ளும் . இப்பொழுது நீங்கள் ராத்திரி புகைப்படத்திற்காக செய்ய வேண்டியது. ISO வை 800 வைக்கவும் பின் Exposure Compensation(ஒளி அளவு சமன்படுத்துதல்) -0.7 க்கு வைத்துக்கொள்ளவும். அதாவது உங்கள் சாதனத்தில் ஒளிசமன்படுத்துதல் மீட்டர் இருக்கும் அதில் மூன்று கோடுகள் எதிர்புறமாக வைக்கவும். அவ்வளவுதான் முக்காலி இல்லாமல் சுட்டுதள்ளுங்கள்.... உங்களின் தேவைகேற்ப ISO வை சிறிது கூட்டி குறைத்து முயற்சித்து பார்த்து ஒரு நல்ல செய்தியை சொல்லிவிட்டு செல்லுங்கள் நன்றீறீ...
கற்றுக்கொள்ளும் நிலையில் நான் இருப்பதால் முடிந்த அளவிற்கு சொல்லியுள்ளேன்.....
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
25 comments:
நல்ல பகிர்வு உண்மையிலே புகைப்படங்கள் அருமை
// தமிழ் வெங்கட் said...
நல்ல பகிர்வு உண்மையிலே புகைப்படங்கள் அருமை//
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் நண்பா
well
// கிளியனூர் இஸ்மத் said...
well//
நன்றிங்க
முக்காலி ஸ்டேன்ட் அல்லது கையா என்று பார்க்கும் போது,ஓரளவு ஒளி இருக்கும் போது கையில் வைத்து எடுத்திருக்கும் ஷாட் தான் எனக்கு பிடிச்சிருக்கு.
//வடுவூர் குமார் said...
முக்காலி ஸ்டேன்ட் அல்லது கையா என்று பார்க்கும் போது,ஓரளவு ஒளி இருக்கும் போது கையில் வைத்து எடுத்திருக்கும் ஷாட் தான் எனக்கு பிடிச்சிருக்கு.//
மகிழ்ச்சி நண்பா
கையால் எடுக்கப்பட்ட முதல் ஷாட் (ராட்டினம்) வெகு அருமை!
P மோட் யூஸ் பண்ணா கொஞ்சம் ஓவர் எக்ஸ்போஸ் ஆகுவதைப்போல் தெரிகிறது நண்பா!
நீங்கள் சொன்ன செட்டிங்க்ஸ் என் காமிராவில் இல்லையே!!
நம்ம சைபர் ஷாட் நைட்டில் சைபர் ஆகிவிடும்!!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
கையால் எடுக்கப்பட்ட முதல் ஷாட் (ராட்டினம்) வெகு அருமை!//
மிக்க நன்றி நண்பா,...
//P மோட் யூஸ் பண்ணா கொஞ்சம் ஓவர் எக்ஸ்போஸ் ஆகுவதைப்போல் தெரிகிறது நண்பா!//
முக்காலி இல்லாமல் எடுக்கவேண்டுமே என்னசெய்வது.. கொஞ்சம் ISO வை குறைத்து முயற்சிக்கலாம் ஆனால் கை நடுக்கம் இல்லாமல் இருக்க வேண்டும்..
மிக்க நன்றி நண்பா
அன்பின் ஞானசேகரன்
திறமை = புகைப்படம் எடுக்கும் திறமை - வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் - ஆம் - படங்கள் சூப்பர்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
// தேவன் மாயம் said...
நீங்கள் சொன்ன செட்டிங்க்ஸ் என் காமிராவில் இல்லையே!!//
உங்கள் கேமராவில் ISO செட்டிங் இருக்கா என்று பார்க்கவும் ISO அதிகப்படுத்தி முயற்சிக்கலாம்....
//நம்ம சைபர் ஷாட் நைட்டில் சைபர் ஆகிவிடும்!!//
சைபரை அதிகப்படுத்திவிடுங்கள்.... பக்கத்தில் 1 2 3 4 5 ...... போடலாமே... உங்கள் ஆர்வத்திற்கு ஒரு DSLR வாங்கலாம்....
///cheena (சீனா) said...
அன்பின் ஞானசேகரன்
திறமை = புகைப்படம் எடுக்கும் திறமை - வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் - ஆம் - படங்கள் சூப்பர்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா//
மகிழ்ச்சியுடன் நன்றிங்க அய்யா....
இரண்டுமே நல்லா இருக்கு.
அந்த 3 கட்டிடமா ஆரம்பிச்சு மேலே ஒண்ணாகுதே அது என்ன கட்டிடம்?
நீங்கள் ஊருக்கு வரும்போது நேரில் கற்று க்கொள்ள வேண்டும்.
நல்ல பதிவுங்கோ....எந்த கேமரா ல எடுத்ததுனு சொல்லவே இல்லையே அண்ணே....
கருத்து போட்டவங்களாம் ஓட்டுப்போட்டால் பதிவு அனைவரையும் சென்று அடையுமே..? கவனிப்பார்களா..,? பதிவு அருமை. வாழ்க வளமுடன்.வேலன்.
// தருமி said...
இரண்டுமே நல்லா இருக்கு.
அந்த 3 கட்டிடமா ஆரம்பிச்சு மேலே ஒண்ணாகுதே அது என்ன கட்டிடம்?//
நன்றி ஐயா,..
அந்த கட்டிடம்
Marina Bay Sands
அதைப்பற்றி இந்த தளத்தில் பார்திருப்பீர்கள்
http://kandathumsuddathum.blogspot.com/2010/03/blog-post_29.html
//ஜெரி ஈசானந்தன். said...
நீங்கள் ஊருக்கு வரும்போது நேரில் கற்று க்கொள்ள வேண்டும்.//
கணடிப்பாக சார்,....
மிக்க நன்றிங்க
// BONIFACE said...
நல்ல பதிவுங்கோ....எந்த கேமரா ல எடுத்ததுனு சொல்லவே இல்லையே அண்ணே....//
வணக்கம் தம்பி
மிக்க நன்றிபா... இந்த படம் cannon 500D ல் எடுக்கப்பட்டது.
// வேலன். said...
கருத்து போட்டவங்களாம் ஓட்டுப்போட்டால் பதிவு அனைவரையும் சென்று அடையுமே..? கவனிப்பார்களா..,? பதிவு அருமை. வாழ்க வளமுடன்.வேலன்.//
மிக்க நன்றிங்க வேலன். உங்களின் பணி தொடர வாழ்த்துகள்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
shutter speed ஐ
கதவு நேரம் என்று சொல்வதை விட
கதவு வேகம் என சொல்லுங்களேன்.
கதவு நேரம் என்றால் shutter time
என்றெல்லவா மனதிற்கு படுகிறது.
//soundr said...
shutter speed ஐ
கதவு நேரம் என்று சொல்வதை விட
கதவு வேகம் என சொல்லுங்களேன்.
கதவு நேரம் என்றால் shutter time
என்றெல்லவா மனதிற்கு படுகிறது.//
மிக்க நன்றி சுந்தர்... மிக சரிதான்
அழைப்பிதழ்:
உங்களது இந்த இடுகையை இன்றைய வலைச்சரத்தில் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து உள்ளேன்.
மனோரஞ்சிதம் - புகைப்படச் சரம்
http://www.blogintamil.blogspot.in/2012/04/blog-post_06.html
வருகை புரிந்து உங்கள் கருத்துகளைச் சொல்ல அன்புடன் அழைக்கிறேன்.
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
Post a Comment