_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Adobe Photoshop ல் "Magic wand tool" ஐ பற்றி ஒரு கண்ணோட்டம் மற்றும் ஒரு பயிற்சி பாடம் ஒலியும் ஒளியில்...

Adobe Photoshop ல் "Magic wand tool" ஐ பற்றி ஒரு கண்ணோட்டம் மற்றும் ஒரு பயிற்சி பாடம் ஒலியும் ஒளியில்...

வ ணக்கம் நண்பர்களே!
Adobe Photoshop ல் Magic wand tool ஐ பற்றி தற்பொழுது பார்ப்போம். இந்த டூலும் புகைப்படத்தில் தேவையான பகுதியை தேர்வு செய்யும் டூல்தான். pen tool லை போல நமக்கு தேவையான பகுதியை தேர்வு செய்ய பயன்படுத்தப்படுகின்றது. இந்த டூல் color தேர்வு முறைப்படி வேலை செய்கின்றது. ஒரே வகையான நிறத்தை தேர்வு செய்யும். இவற்றை பயன் படுத்தி நமக்கு தேவையான பகுதியை தேர்வு செய்து. தேர்வான பகுதியை தேவையான இடத்தில் பொருத்தி அழகுப்படுத்தலாம். அவ்வாறு அழகுபடுத்திய பயிற்சியும் இங்கே ஒலியும் ஒளியும் அமைப்பில் கொடுத்துள்ளேன்.


மேற்கண்ட புகைப்படம் சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தை பயிற்சிக்காக எடுத்துக்கொள்வோம். இந்த படத்தில் தாயும் சேயும் உள்ள சிலையை மட்டும் தேர்வு செய்து பின்னர் வேறு ஒரு புகைப்படமாக அழகுபடுத்தியுள்ளேன். இதன் செயல் விளக்கம் ஒலி ஒளி வடிவில் கீழ்யுள்ள சுட்டியில் உள்ளது. இவற்றை தறமிரக்கி ஓட்டி பார்க்கவும். exe. வடிவில் உள்ளதால் player தேவையில்லை. ம்ம்ம்ம்ம் சுட்டியை சுட்டுங்கள்

Adobe Photoshop ல் "Magic wand tool" ஐ பற்றி ஒரு கண்ணோட்டம் மற்றும் ஒரு பயிற்சி பாடம்


மேற்கண்டவாறு தேர்வு செய்து அழகுப்படுத்திய புதிய புகைப்படம்தான் கீழேயுள்ளது. பிடிந்திருந்தால் சொல்லிட்டு போங்க நண்பர்களே!



அன்புடன்,
ஆ,ஞானசேகரன்.....

14 comments:

தமிழ் உதயம் said...

இயற்கை இயற்கை தான். செயற்கையில் அழகு தெரிகிறது.

ஆ.ஞானசேகரன் said...

//தமிழ் உதயம் said...

இயற்கை இயற்கை தான். செயற்கையில் அழகு தெரிகிறது.//

மிக்க நன்றி நண்பா,...

மோகன்ஜி said...

ரொம்ப அழகு.. தமிழைப்போல

ஆ.ஞானசேகரன் said...

// மோகன்ஜி said...

ரொம்ப அழகு.. தமிழைப்போல/

மிக்க நன்றிங்க

தாவீது யோசெப் said...

நண்பரே!
உங்கள் தளம் மிகவும் அருமையாக உள்ளது. மேலும் தொடர்ந்து கொடுங்கள்.

- தாவீது யோசெப் -

ஃ தமிழ் ஈழம் ஃ

ஆ.ஞானசேகரன் said...

// தாவீது யோசெப் said...

நண்பரே!
உங்கள் தளம் மிகவும் அருமையாக உள்ளது. மேலும் தொடர்ந்து கொடுங்கள்.

- தாவீது யோசெப் -

ஃ தமிழ் ஈழம் ஃ//

வணக்கம் நண்பரே,..
உங்களின் வருகை மகிழ்ச்சி
மிக்க நன்றிங்க

மின்னுது மின்னல் said...

வீடியோவை youtube லும் ஏற்றலாமே அனைவருக்கும் பயன் படும்

ஆ.ஞானசேகரன் said...

// மின்னுது மின்னல் said...

வீடியோவை youtube லும் ஏற்றலாமே அனைவருக்கும் பயன் படும்//

வணக்கங்க... உங்களின் வருகை மகிழ்ச்சி.... இது exe. file கோப்பு என்பதால் youtube ல் ஏற்ற முடியாது. பின்னர் வீடியோ கோப்பாக மாற்றி போடுகின்றேன்...

sakthi said...

அன்பு நண்பர் ஞானம் ,( ஆசிரியர் )
மிக அருமையான தெளிவான விளக்கம் .ஒலி, ஒளி, வடிவில் இருப்பதால் கற்றுக்கொள்ள மிக எளிமையாக உள்ளது ..இதே போல் எல்லா tool -களுக்கும் ஒலி, ஒளி, வடிவில் கற்று கொடுத்தால் மிக்க பயனடைவோம் .
தொடர்க உங்கள் சேவை
நன்றியுடன் ,
கோவை சக்தி

ஆ.ஞானசேகரன் said...

// sakthi said...

அன்பு நண்பர் ஞானம் ,( ஆசிரியர் )
மிக அருமையான தெளிவான விளக்கம் .ஒலி, ஒளி, வடிவில் இருப்பதால் கற்றுக்கொள்ள மிக எளிமையாக உள்ளது ..இதே போல் எல்லா tool -களுக்கும் ஒலி, ஒளி, வடிவில் கற்று கொடுத்தால் மிக்க பயனடைவோம் .
தொடர்க உங்கள் சேவை
நன்றியுடன் ,
கோவை சக்தி//

வணக்கம் சக்தி.
உபயோகமாக இருந்தால் இதுபோல் கற்றுக்கொண்டு சொல்லுகின்றேன் (செய்கின்றேன்)... கற்றதன் பயன் கற்றுகொடுப்பதே!

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

ராஜ நடராஜன் said...

தல! சூரியனுக்கே கலரடிக்கிறீங்களே!எப்படி?

ஒலியும் ஒளியும் கண்ணுல படவில்லையே.மறுபடியும் தேடுகிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

// ராஜ நடராஜன் said...

தல! சூரியனுக்கே கலரடிக்கிறீங்களே!எப்படி?

ஒலியும் ஒளியும் கண்ணுல படவில்லையே.மறுபடியும் தேடுகிறேன்.//

வாங்க நண்பா... நலமா?

Ashwin-WIN said...

மிக்க மிக்க நன்றி ஞானசேகரன்.. தங்கள் "Adobe Photoshop'' பற்றிய சகல பதிவுகளையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.. மிகவும் பிரயோசனமா இருக்கு.. இப்போ நானும் எதோ Photoshop ல் செய்யுறான் எண்டா அது உங்களால்தான்.. அத்தோடு "Adobe Photoshop ல் எப்படி புதிய டிசைன்களை வடிவங்களை வரைவது பத்தி சொல்லமுடியுமா?
Ashwin Win
http://ashwin-win.blogspot.com/

ஆ.ஞானசேகரன் said...

//Ashwin-WIN said...

மிக்க மிக்க நன்றி ஞானசேகரன்.. தங்கள் "Adobe Photoshop'' பற்றிய சகல பதிவுகளையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.. மிகவும் பிரயோசனமா இருக்கு.. இப்போ நானும் எதோ Photoshop ல் செய்யுறான் எண்டா அது உங்களால்தான்.. அத்தோடு "Adobe Photoshop ல் எப்படி புதிய டிசைன்களை வடிவங்களை வரைவது பத்தி சொல்லமுடியுமா?
Ashwin Win
http://ashwin-win.blogspot.com/
//

மிக்க மகிழ்ச்சிங்க....
நேரம் கிடைக்கும்பொழுது கண்டிப்பாக செய்கின்றேன்..

நட்புடன்
ஆ.ஞானசேகரன்

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket