படம் சொல்லும் கதை (மண்டல அளவிளான கால்பந்து போட்டி-திருச்சி)
வணக்கம் நண்பர்களே!
திருச்சி மாவட்டம் துப்பாக்கித்தொழிற்சாலையில் நண்பர்கள் ஒன்றுப்பட்ட முயற்சியாக மணடல அளவிளான கால்பந்து போட்டி 2011 ஆகஸ்டு 18 முதல் 21 வரை மிக சிறப்பாக நடைபெற்றது. இதை பற்றி சென்ற வாரம் அம்மா அப்பா தளத்தில்
மண்டல அளவிளான கால்பந்து போட்டி(திருச்சி) ஒரு கண்ணோட்டம்...
பதிவிட்டுள்ளேன். இதைப் பற்றி அறிய மேலேயுள்ள சுட்டியை சுட்டி தெரிந்துக் கொள்ளலாம். அந்த நான்கு நாட்கள் நடந்த விளையாட்டுகளின் ஒரு சில புகைப்படங்கள் நான் எடுத்தேன். இது போன்று விளையாட்டை எடுப்பது எனக்கு இதுவே முதல் முறை அதில் சிலப்புகைப்படம் நன்றாகத்தான் இருக்கின்றது. அந்த புகைப்படங்களை உங்களோடு பகிந்துக்கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சியே!... அதேபோல் விளையாட்டுகளை புகைப்படம் எடுக்கும்பொழுது நாம் கவணிக்க வேண்டியவை என்ன? எப்படி புகைப்படம் எடுக்கலாம்? என்ற என் அனுபவங்களை உங்ளோடு பகிர்ந்தால் நல்லது என்று நினைக்கின்றேன். இது அன்று எனக்கு கிடைத்த அனுபவம் மட்டுமே....... மேலும் உங்களின் அனுபவங்களை இங்கே பகிர்ந்தால் நன்றாக இருக்கும்..... என்னை போன்று மற்றவர்களும் தெரிந்துக்கொள்வார்கள்.
கால்பந்து விளையாடும் வீரர்கள் மற்றும் பந்தின் வேகம் அதிகமாக இருக்கும்... அந்த நேரத்தில் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால்... நாம் கவணிக்க வேண்டியது ஒளி, மற்றும் வேகம். கேமராவின் கதவு வேகம் (shutter speed) குறைவாக எடுத்தால் அந்தப்படம் கலங்கலாகதான் வரும் ஏன் என்றால் ஆடுபவரின் கை கால்களின் வேகமும் தெரியும். அப்படியானால் (shutter speed) கதவின் வெகம் அதிகப்படத்த வேண்டும். ஆனால் கதவு வேகம் அதிகரிக்கும் பொழுது ஒளியின் அளவு குறைந்து படம் இருட்டாக இருக்கும். இது போன்று விளையாட்டுகளை புகைப்படம் எடுக்க கேமராவில் சிறப்பான ஒரு மோடையும் கொடுத்துள்ளார்கள். ஆனால் அதை பயன்ப்படுத்துவதில் ஒரு சிக்கல் ஒளியின் அளவு மாற்றம் கண்டபொழுது புகைப்படம் தெளிவாக கிடைக்காது.
ஒளி மற்றும் நிகழ்வு சரியாக வரவேண்டும் என்றால் நாம் (shutter priority ) தேர்ந்தெடுத்தால் நல்லது என்பது என் எண்ணம். அப்படிதான் அன்று shutter priority யை தேர்வு செய்தேன்.... shutter speed ஐ நாம் தேர்வு செய்தபின் கேமரா அதன் லென்சின் விட்டத்தை அதுவே தேர்வு செய்துவிடும்... ஒளியுன் அளவை கணக்கிட்டு லென்சின் விட்டத்தை கேமராவே தேர்வு செய்துக்கொள்ளும். அன்று அங்கு இருந்த தப்பவெப்பநிலைக்கு shutter speed 1/500 சரியாக இருந்தது. இந்த அளவு எல்லா நேரங்களிலும் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நீங்களும் செய்துப்பார்த்து கருத்துக்களை பகிர்ந்தால் எல்லோருக்கும் நன்மைக்கொடுக்கும்.
கீழே அன்று நான் எடுத்த புகைப்படங்கள் சில பதிந்துள்ளேன். மேலும் சிலப்புகைப்படம் இன்னும் சில தினங்களில் பதிவேன்... உங்களின் உண்மையான விமர்சனம்ங்களையும் மாற்றுக் கருத்துகளையும் தயங்காமல் சொல்லுங்களேன். உங்களுன் அனுபவங்களையும் சொன்னால் நல்லது.
All Photos By
Lighthouse Photos
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
படம் சொல்லும் கதை (மண்டல அளவிளான கால்பந்து போட்டி-திருச்சி)
Posted by
ஆ.ஞானசேகரன்
on Tuesday, 30 August 2011
Labels:
FOOTBALL,
கால்பந்து,
திருச்சி,
புகைப்படம்
வணக்கம் நண்பர்களே!
கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

14 comments:
கண்ணை கவரும் படங்கள் வாழ்த்துக்கள்
அன்புடன் ,
கோவை சக்தி
//sakthi said...
கண்ணை கவரும் படங்கள் வாழ்த்துக்கள்
அன்புடன் ,
கோவை சக்தி//
மிக்க நன்றிங்க சக்தி
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
கிளிக்கிய தருணங்கள் அருமை!
//கோகுல் said...
கிளிக்கிய தருணங்கள் அருமை!//
வணக்கம் நண்பா..
மிக்க நன்றிங்க
photos அனைத்தும் அருமை.. வழமை போல...
[[Mohamed Faaique said...
photos அனைத்தும் அருமை.. வழமை போல...]]
மிக்க நன்றி நண்பா
கீழிருந்து நான்காவது படம் - கோல் அடிப்பது போன்ற படம் - இது எங்கிருந்து அந்த angle கிடைத்தது?
என்ன zoom பயன்படுத்தினீர்கள்?
தரையில் கால்படாமல்
வீரர்கள் பந்தோடு போகும் படங்கள் பிடித்தன. நல்ல கணங்கள் ...
[[தருமி said...
கீழிருந்து நான்காவது படம் - கோல் அடிப்பது போன்ற படம் - இது எங்கிருந்து அந்த angle கிடைத்தது?
என்ன zoom பயன்படுத்தினீர்கள்?
தரையில் கால்படாமல்
வீரர்கள் பந்தோடு போகும் படங்கள் பிடித்தன. நல்ல கணங்கள் ...]]
வணக்கம் ஐயா
மிக்க நன்றி
70 to 250 zoom லென்ஸ் பயன்படுத்தினேன்
காத்திருந்து கிடைத்த படம்... இன்னும் நன்றாக வந்திருக்கனும் ஏமாந்துவிட்டேன்..
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
so lively.congrats.
[[ ஜெரி ஈசானந்தன். said...
so lively.congrats.]]
நன்றி சார்
அனைத்து படங்களும் அருமையாகஉள்ளது.
வாழ்த்துக்கள்.
//மச்சவல்லவன் said...
அனைத்து படங்களும் அருமையாகஉள்ளது.
வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி நண்பா
கண்ணை கவரும் படங்கள்
//மாலதி said...
கண்ணை கவரும் படங்கள்//
நன்றிங்க
Post a Comment