_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்
Showing posts with label photoshop. Show all posts
Showing posts with label photoshop. Show all posts

புகைப்படத்தில் Blurred Background மற்றுமொரு உத்தி...

புகைப்படத்தில் Blurred Background மற்றுமொரு உத்தி...

பல வேலைகளில் நாம் எடுக்க நினைத்த காட்சியை விட அதன் பின் புறம் உள்ள நிகழ்வுகள் மற்றும் காட்சிகள் தெளிவாக வந்துவிடும். அதன் விளைவாக நாம் எடுத்த புகைப்படம் போற்றும்படியாக இருக்காது. இதை நாம் அழகுபடுத்த என்ன செய்யலாம்.....? இதற்கு photoshop மென்பொருள் பெரிதும் உதவுகின்றது.
அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். அதற்கு முன் கீழ் உள்ள புகைப்படத்தை கவணியுங்கள்

இந்த புகைப்படம் பூண்டி மாதாக்கோவிலில் உள்ள பூக்காவில் நான் Cyber-shot™ Digital Camera ல் எடுத்தது. இதை எடுக்கும்பொழுது "மாதா சிலையை" நினைவில் கொண்டு எடுத்தேன். ஆனால் பாருங்கள் அதன் பின்புறமுள்ள மரம் செடிகள் எல்லாம் தெளிவாக தெரிகின்றது. அதனால் என் எண்ணங்களில் உள்ள வடிவம் கிடைக்காமல் போய்விட்டது. இப்புகைப்படத்தை என் எண்ணங்களில் தோன்றியவாறு இருக்க photoshop மென்பொருள் மூலம் மாற்ற முயற்சித்தேன். ... அவற்றைப்பற்றி உங்களோடு ஒரு பகிர்வு.

முதலில் மேற்கண்ட புகைப்படத்தை photoshop ல் திறந்துக்கொள்ளவும்.


பின்னர் ஒரு நகல் எடுத்துக்கொள்ளவும். அதன் பின்னர் pen tool எடுத்துக் கொண்டு மாதவை மட்டும் தேர்வு செய்யவும். கீழ்கண்ட படம் உங்களுக்கு விளக்கும்.



இப்பொழுது நமக்கு வேண்டி பகுதி மாதா மட்டும் தேர்வு நிலையில் இருக்கும். பின் select inverse ஐ சுட்டினால் மாதா பகுதியை தவிற்த்து மீதி பகுதி தேர்வாகி இருக்கும் . இவற்றில் விளக்கம் கீழ்யுள்ள படத்தில் பார்க்கலாம்..




இப்பொழுது தேர்வாகிய பின் புறத்தை தெளிவற்றவையாக மாற்றினால் மாதாவின் படம் தெளிவாக நமக்கு கிடைக்கும்... இதுதான் சூட்சமம்...



அவ்வாறு மாற்ற Filter மற்றும் Blur, lensBlur.... பகுதியை சுட்டவும்.... அவற்றின் விளக்கம் பின் உள்ள படத்தில் கவணிக்கவும்...



அவ்வாறு சுட்டினால் பின் வரும் விண்டோ கிடைக்கும். அவற்றில் Radius மற்றும் Amount மாற்றி பார்த்து ok வை கிளிக் பன்னவும்....




நான் இந்த படத்திற்கு. Radius 39, Amount 3 கொடுத்து ok கொடுத்தேன்.. அவ்வாறு கிடைத்த படம் இதுதான். கீழே பார்க்கவும்... பிடிந்திருந்தால் சொல்லுங்கள்.




இந்த படம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நினைக்கின்றேன்...... மேலும் சில படங்கள் கீழே உங்களுக்காக. இந்த படம் canon DSLR ல் எடுத்த புகைப்படம். இந்த படத்தில் Backgroun Blur உத்தி அந்த கேமராவிலேயே செய்தது. அவற்றையும் பின்னர் பார்க்கலாம்.. அதற்கு முன் புகைப்படத்தை கவணியுங்கள்.





மேலெயுள்ள பறவை புகைப்படத்தில் கவணித்தால் Background தெளிவில்லாமல் நமக்கு தேவையான பறவை மிக தெளிவாக இருக்கின்றது. இதை எப்படி எடுப்பது?.....

எனக்கு தெரிந்த ஒரு உத்தியை சொல்கின்றேன்.... கேமராவில் Aperture Priority ஐ தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். இந்த மோடில் Aperture ஐ நாம் கொடுக்க வேண்டும். மேற்கண்ட உத்திக்கு லென்சின் விட்டம் பெரிதாக கொடுக்க வேண்டும்... அதாவது Aperture value சிறியதாக இருக்க வேண்டும். உதாரணமாக 4 முதல் 7 வரை கொடுக்கலாம்... அதே போல் லென்ஸ் 55 to 200 இருந்தால் நல்லது அதாவது focal length 70mm இருந்தால் நன்றாக இருக்கும்...

முயற்சித்து பார்த்து சொல்லுங்கள்.... உங்களின் ஊக்கம் மேலும் எழுத வைக்கலாம்...

அன்புடன்,
ஆ.ஞானசேகரன்...


Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket