_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

புகைப்படத்தில் Motion Blur..... ஒரு உத்தி....

புகைப்படத்தில் Motion Blur.... ஒரு உத்தி.....

கடையில் வியாபாரம் அந்த அளவிற்கு இல்லை.. ஒரு நண்பரின் ஆலோசனையின் படி கடைக்கு முன் பகுதியில் ஆல் உயர முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தார். அதன் பின் வியாபாரம் முன்னேற்றம் கண்டது. இதன் மர்மம் கண்ணாடியில் தன்னை பார்த்துக்கொள்ள சிலர் வந்தார்கள் அப்படி வந்த சிலர் கடையில் பொருள்களை வாங்கினார்கள்......

உண்மையில் தன்னை பார்த்து ரசிக்காதவர்கள் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிதான் புகைப்படமும் அதன் ரசனையும். ஆதிகாலம் முதல் இந்த பழக்கம் இருந்து வந்துள்ளதற்கான ஆதாரங்கள் இருக்கதான் செய்கின்றது. தன்னை, தான் பார்த்த பொருளை மற்றும் இடங்களை புகைப்படங்களாக பதித்து பார்ப்பதில் ஒரு ஆணந்தம் இருக்கதான் செய்கின்றது. அப்படிப்பட்ட புகைப்படத்தில் அழகுக்காக சில பிற்சேற்கைகள் செய்யப்படுவதும் ஒரு வகை அழகுதான்.... அப்படிப்பட்ட பிற்சேர்க்கைகளில் Motion Blur ம் ஒன்று... கீழேயுள்ள புகைப்படத்தை பாருங்கள் படகு வேகமாக செல்கின்றது..... இந்தப்படம் எனது canon EOS 500D ல் எடுத்தது. இதில் படகு தெளிவாகவும் மற்ற பின்புறங்கள் தெளிவற்றும் அதன் வேகம் மற்றும் செல்லும் திசை தெரியும்படி இருக்கின்றது. இந்த உத்தியும் ஒருவித அழகுதான்......

இப்படிப்பட்ட புகைப்பட உத்தி இரண்டு வகைகளில் கொடுக்கலாம் ஒன்று DSLR கேமராக்களில் அதன் setting மூலம் நேரடியாக எடுக்கலாம். மற்றொன்று Photoshop மூலம் கொடுக்கலாம்... என்னை பொருத்தவரை கேமராவின் மூலம் கொடுக்கும் படம் நல்ல அழகுடன் இருக்கும்....

முதலில் கேமராவில் இந்த உத்தியை எப்படி எடுப்பது என்பதைப்பற்றி பார்க்கலாம். உதாரணத்திற்கு கீழ் உள்ள படகு புகைப்படத்தை எடுத்துக்கொள்ளலாம். முதலில் அப்படி எடுக்கப்படும் படத்திற்கு தன்னை தாயார்ப்படுத்திக்கொள்ளுதல் முக்கியம். ஏன் என்றால் படத்தின் கரு ஓடும் நிலையில் இருப்பதால்.....

கேமரா setting பார்க்கலாம்.......
எல்லா வகையான DSLR கேமராக்களிலும் எடுக்கலாம். கேமராவில் shutter priorty யை தேர்வு செய்துக்கொள்ளவும் sutter speed 1/15 , ISO 200 தேர்வு செய்துக்கொண்டு எடுக்க வேண்டிய ஓடும் பொருளை ஓடும் திசையை பார்த்து எடுக்கவும் அப்படி எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இந்த படகு... நீங்களும் முயற்சித்து சொல்லுங்கள்....



அடுத்ததாக Photoshop ல் எப்படி இந்த உத்தியை கொண்டுவருவது...


Photoshop ல் Motion Blur உத்தியை கொண்டுவர.... நான் கீழ்கண்ட படத்தை தேர்ந்தெடுத்துள்ளேன்..


மேற்கண்ட புகைப்படத்தை Photoshop ல் திறந்துக்கொள்ளவும்...


திறந்தப்படத்தில் மகிழுந்தை மட்டும் pen tooll லால் தேர்வு செய்யவும்... கீழேயுள்ள படத்தை பார்க்கவும்


பின்னர் select inverse ஐ தேர்வு செய்யவும். அதாவது மகிழுந்தை தவிற்த்து மற்ற பகுதிகள் தேர்வாகி இருக்கும். கீழேயுள்ள படத்தை கவணிக்கவும்



அதன் பின் filter சென்று Blur மற்றும் Motion Blur ஐ தேர்வு செய்யவும் ஒரு சிறிய விண்டோ திறக்கும். அந்த விண்டோவில் angle மற்றும் distance ஐ தேர்வு செய்யவும். நான் இந்த படத்திற்கு angle -27 , distance 182 தேர்வு செய்தேன். தேர்வு செய்தபின் ok கொடுங்கள்... நீங்கள் நினைத்த அழகான Motion Blur புகைப்படம் கிடைக்கும்...




எனக்கு கிடைத்த அந்த அழகான புகைப்படம்....... நிங்களும் செய்துப்பார்க்கவும்...





மேலும் சிலப்படங்கள் என் கேமராவில் எடுத்தது...






அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

சுட்டதில் இரண்டு ...

சுட்டதில் இரண்டு ...




அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Studio வில் சுட்டவை சில...



Studio வில் சுட்டவை சில....

புகைப்படம் எடுப்பது இயற்கையான ஒளியில் இயற்கையான செயலை எடுப்பது என்பது ஒரு அழகுதான். சில நேரங்களில் செயற்கையாக ஒளியூட்டி உள்ளரங்கில்(Studio) எடுப்பதும் ஒரு உத்திதான். அப்படி உள்ளரங்கில் எடுத்த சில படங்கள் உங்களின் பகிர்வுக்காக. சுட்டது சிங்கப்பூர் உள்ளரங்கில்.......சிங்கை அழகிகள். உள்ளரங்கு புகைப்படம் எடுப்பதை பற்றி பின்னர் ஒருநாளில் பகிரலாம் என்ற எண்ணம் உள்ளது.

புகைப்படம் மேலும் மெருகூட்ட உதவிய வேலன் சாருக்கு நன்றி
வேலன்












பிடித்திருந்தால் சொல்லுங்கள் ...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

PiTன் ஜூன் 2010 புகைப்பட போட்டிக்காக [மகிழ்ச்சி (உவகை, களிப்பு, ஆனந்தம்) ]

PiTன் ஜூன் 2010 புகைப்பட போட்டிக்காக [மகிழ்ச்சி (உவகை, களிப்பு, ஆனந்தம்) ]

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

ராத்திரியில்..... புகைப்படம் எடுக்கனும் எப்படி?(DSLR)

ராத்திரியில்..... புகைப்படம் எடுக்கனும் எப்படி? (DSLR)

ராத்திரியில சில காட்சிகளை பார்க்கின்ற பொழுது மிக அழகாக இருக்கும் அதை அப்படியே புகைப்படமாக எடுக்க ஆசைதான் அதற்கு முக்காலி (Tripod) கண்டிப்பாக தேவைப்படுகின்றது. ஆனால் பல நேரங்களில் முக்காலியை எடுத்து செல்வதில்லை (எடுத்து செல்வது சுலபமாக இல்லை அதனால்) முக்காலி இல்லாமல் அப்படிப்பட்ட காட்சிகளை எடுக்க வேண்டும் எப்படி?

ஏன் முக்காலி தேவைப்படுகின்றது? ராத்தியில் ஒளி குறைவாக இருக்கும் அந்த நிலையில் புகைப்படம் எடுக்க கதவு நேரம்(shutter speed) குறைவாக இருக்கவேண்டும். அதாவது கதவு திறந்து மூடும் நேரம் அதிகமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ராத்திரியில் ஒளி அனைத்தையும் சாதனம்(camera) உள்வாங்கும். கதவு நேரம் குறைவாக இருக்கும் பொழுது சாதனம் அசையாமல் இருக்க வேண்டும். அதற்காகதான் முக்காலி தேவைப்படுகின்றது.

கையில் எவ்வளவு நேரம் அசையாமல் பிடிக்க முடியும்? அது அவரவர் திறன்கேற்றபடி இருக்கலாம். ஆனால் 1/குவியதூரம்(Focal length) நேரம் வரை அதிர்வை தாங்க முடியும் என்று சொல்லலாம். உதாரணமாக 50MM குவியத்தூரத்தில் எடுத்தால் 1/50 sec. கைகளால் எடுக்க முடியும் எனலாம்...( சரியாக இருக்கும் என்றே நினைக்கின்றேன்)

நான் முக்காலி உதவியுடன் கீழேயுள்ள இரண்டும் புகைப்படங்களை எடுத்துள்ளேன். சிறப்பாக இருந்தால் பாராட்ட மறக்க வேண்டாம்.. ராத்திரி காட்சி புகைப்படம் அழகாகதான் இருக்கின்றது.... முக்காலி வேண்டுமே!

Aperture priority
F/5.6 5 Sec
ISO 200
Exposure Compensation 0 step


Aperture priority
F/8 13 Sec
ISO 100
Exposure Compensation 0 step


மேலேயுள்ள இரண்டு புகைப்படத்தையும் பார்த்தீர்கள்.... பாராட்டி ஒரு பின்னூட்டம் போட்டுருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். இப்போழுது கீழே இரண்டு புகைப்படம் அதே இடத்தில் அதே நேரத்தில் எடுக்கப்பட்டது. ஆனால் முக்காலி பயன்படுத்தவில்லை.... முக்காலி பயன்படுத்திய புகைப்படத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் தெரிகின்றது என்று கவணியுங்கள். வித்தியாசம் இருக்காலாம் ஆனாலும் ஒரு நல்ல புகைப்படம் பதிவு செய்த மகிழ்ச்சி இருக்கின்றது. முக்காலி இல்லாமல் எடுப்பது எப்படி? ...... புகைப்படத்தை பார்த்துவிட்டு கீழே வாருங்கள்...

Program priority
F/4 1/3 Sec
ISO 800
Exposure Compensation -0.7 step


Program priority
F/4 1/4 Sec
ISO 800
Exposure Compensation -0.7 step


மேலேயுள்ள புகைப்படத்தை பார்த்து இருப்பீர்கள் நன்றி. எப்படி இந்த ராத்திரி காட்சி எடுக்கப்பட்டது. சாதனத்தில்(camera) Programமோடில் வைத்து கொள்ளவும் . இந்த மோடில் கதவு நேரம் மற்றும் லென்சின் விட்டம் சாதனமே நிர்ணம் செய்துக்கொள்ளும் . இப்பொழுது நீங்கள் ராத்திரி புகைப்படத்திற்காக செய்ய வேண்டியது. ISO வை 800 வைக்கவும் பின் Exposure Compensation(ஒளி அளவு சமன்படுத்துதல்) -0.7 க்கு வைத்துக்கொள்ளவும். அதாவது உங்கள் சாதனத்தில் ஒளிசமன்படுத்துதல் மீட்டர் இருக்கும் அதில் மூன்று கோடுகள் எதிர்புறமாக வைக்கவும். அவ்வளவுதான் முக்காலி இல்லாமல் சுட்டுதள்ளுங்கள்.... உங்களின் தேவைகேற்ப ISO வை சிறிது கூட்டி குறைத்து முயற்சித்து பார்த்து ஒரு நல்ல செய்தியை சொல்லிவிட்டு செல்லுங்கள் நன்றீறீ...

கற்றுக்கொள்ளும் நிலையில் நான் இருப்பதால் முடிந்த அளவிற்கு சொல்லியுள்ளேன்.....

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

மாடல் சூட்..... சீன அழகி

மாடல் சூட்..... சீன அழகி













சுட்டவன்.
ஆ.ஞானசேகரன்


இரவினில் பார்த்த.........சிங்கப்பூர் (புகைப்படம்)

இரவினில் பார்த்த.........சிங்கப்பூர் (புகைப்படம்)






சுட்டவன்......
ஆ.ஞானசேகரன்

சுட்டவை சில.....

சுட்டவை சில.....

மாடல் அழகிகள்....





பூமியை சுற்றிவர நினைத்து உன்னையே சுற்றும் பொம்மை.......


இது விளம்பரம் இல்லை...


சிங்கப்பூர் மணல் மேடு ஆகாயத்தோட்டம்...


சிங்கப்பூர் சுற்றும் சக்கரம்


சுட்டவன்.
ஆ.ஞானசேகரன்
..........

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket