திணை என்றால் நிலம், நமது முன்னோர்கள் நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து பிரிவாக பிரித்துள்ளனர். அதாவது..... மலையும் மலைச்சார்ந்த இடம் குறிஞ்சி... காடும் காடு சார்ந்த இடம் முல்லை... வயலும் வயல் சார்ந்த இடம் மருதம்... கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல்... மணலும் மணல் சார்ந்த இடம் பாலை என பிரித்துள்ளார்கள். இங்கு நான் சுட்ட புகைப்படம் மலையும் மலைச்சார்ந்த இடம். சிங்கப்பூரில் உள்ள புக்கிட் பாத்தோக், மற்றும் புக்கிட் கோம்பாக் இங்குதான் மலைகள் இருப்பதாக எனக்கு தெரிகின்றது. புக்கிட் என்றால் மாலாய் மொழியில் மலை என்று பொருள். பாத்தோக் என்றால் மலாய் மொழியில் தென்னை தோட்டம் என்ற பொருள்.... மலைகளில் உள்ள தென்னை தோட்டம் என்ற பொருளில் அழைக்கப்படும் இடம் புக்கிட் பாத்தோக் (Bukit Bathok). தற்பொழுது தென்னை தோட்டங்கள் இல்லை மாறாக அடுக்கு மாடி குடியிருப்புகள் இருக்கின்றது. இருந்தாலும் அந்த மலையும் மலைச்சார்ந்த இடமும் பராமரித்து வருகின்றார்கள். இந்த இடம் இயற்கையான சூழலில் இருக்கும் குடியிருப்புகள். நல்ல காற்றோட்டம் உள்ள இடம். அதே போல கோம்பாக் என்றால் மலாய் மொழியில் சேகரிப்பு (collation of somthing) என்ற பொருள். புக்கிட் கோம்பாக்(Bukit Gombak) என்றால் மலைகளின் சேகரிப்பு என்ற பொருள் கொள்ளலாம். இந்த இடமும் இயற்கை சுழல்கொண்ட இடம். கீழ்கண்ட புகைப்படங்கள் அங்குதான் எடுக்கப்பட்டது.......
மேலேயுள்ள புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். இது போன்ற இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வந்தால் நல்லது என்ற எண்ணங்கள் இருக்கலாம். கவலைவிடுங்கள் அதற்கான வாய்ப்பு உங்களை தேடி வந்துள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...... ஆழ்ந்து சிந்தித்து கருத்தாய்வு செய்தவையை எழுதி அனுப்பினால் போதும்.
சென்ற ஆண்டை போன்று இந்த ஆண்டும் “மணற்கேணி- 2010” சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதற்காண தலைப்புகள் மற்றும் விதிமுறைகளை பார்க்க கீழ்யுள்ள நிரலியை சுட்டுங்கள். தலைப்புகள் மூன்று பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவர் என மூவருக்கு சிங்கப்பூர் சென்று வர வாய்ப்புகள் உள்ளது. நிரலியை சுட்டுங்கள் தட்டி செல்லுங்கள் அறிய வாய்ப்பை..........
ஏரிக்கரையும் சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளும் (சுட்டவை சிங்கப்பூர் ஏரிக்கரை 07.10.2010)
சிங்கப்பூர் வந்து சென்றவர்களுக்கு பசுமைமாறா நினைவுகளாக இருப்பது பல இருந்தாலும். என்றுமே அவர்களின் நினைவிற்குள் வருவது சுற்றியுள்ள பசுமைகள்தான். எங்கு பார்த்தாலும் ஓங்கி வளர்ந்த மரங்கள் மற்றும் பச்சை பாய் விரித்தது போன்ற புள்வெளிகளும். இந்த பசுமைக்கு காரணங்கள் இங்குள்ள இயற்கை சூழல்கள் ஒரு புறமிருக்க அரசும் அதன் கடமையை செய்கின்றது. இங்குள்ள பூக்களை பறிப்பது சட்டப்படி குற்றமாகும். அதேபோல பராமிப்பின்றி வளரும் புல் புதர்களுக்கும் அனுமதியும் இல்லை. அப்படி வளரும் இடத்தின் நிர்வாகதிற்கு அபராதம் (தண்டம்) வசூலிக்கப்படும். சிங்கப்பூர் ஏரிக்கரை (Lake side) என்ற இடத்தின் சுற்றியுள்ள இடங்களை சுட்டுதள்ளிய சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்......
மேலேயுள்ள புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். இது போன்ற இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வந்தால் நல்லது என்ற எண்ணங்கள் இருக்கலாம். கவலைவிடுங்கள் அதற்கான வாய்ப்பு உங்களை தேடி வந்துள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...... ஆழ்ந்து சிந்தித்து கருத்தாய்வு செய்தவையை எழுதி அனுப்பினால் போதும்.
சென்ற ஆண்டை போன்று இந்த ஆண்டும் “மணற்கேணி- 2010” சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதற்காண தலைப்புகள் மற்றும் விதிமுறைகளை பார்க்க கீழ்யுள்ள நிரலியை சுட்டுங்கள். தலைப்புகள் மூன்று பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவர் என மூவருக்கு சிங்கப்பூர் சென்று வர வாய்ப்புகள் உள்ளது. நிரலியை சுட்டுங்கள் தட்டி செல்லுங்கள் அறிய வாய்ப்பை..........
Adobe Photoshop ல் "Magic wand tool" ஐ பற்றி ஒரு கண்ணோட்டம் மற்றும் ஒரு பயிற்சி பாடம் ஒலியும் ஒளியில்...
வ ணக்கம் நண்பர்களே! Adobe Photoshop ல் Magic wand tool ஐ பற்றி தற்பொழுது பார்ப்போம். இந்த டூலும் புகைப்படத்தில் தேவையான பகுதியை தேர்வு செய்யும் டூல்தான். pen tool லை போல நமக்கு தேவையான பகுதியை தேர்வு செய்ய பயன்படுத்தப்படுகின்றது. இந்த டூல் color தேர்வு முறைப்படி வேலை செய்கின்றது. ஒரே வகையான நிறத்தை தேர்வு செய்யும். இவற்றை பயன் படுத்தி நமக்கு தேவையான பகுதியை தேர்வு செய்து. தேர்வான பகுதியை தேவையான இடத்தில் பொருத்தி அழகுப்படுத்தலாம். அவ்வாறு அழகுபடுத்திய பயிற்சியும் இங்கே ஒலியும் ஒளியும் அமைப்பில் கொடுத்துள்ளேன்.
மேற்கண்ட புகைப்படம் சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தை பயிற்சிக்காக எடுத்துக்கொள்வோம். இந்த படத்தில் தாயும் சேயும் உள்ள சிலையை மட்டும் தேர்வு செய்து பின்னர் வேறு ஒரு புகைப்படமாக அழகுபடுத்தியுள்ளேன். இதன் செயல் விளக்கம் ஒலி ஒளி வடிவில் கீழ்யுள்ள சுட்டியில் உள்ளது. இவற்றை தறமிரக்கி ஓட்டி பார்க்கவும். exe. வடிவில் உள்ளதால் player தேவையில்லை. ம்ம்ம்ம்ம் சுட்டியை சுட்டுங்கள்
பச்சை நிறத்தை பார்ப்பதற்கு நம்முடைய கண்கள் எப்பொழுதுமே கூச்சப்பட்டதில்லை. ஆனால் அந்த பசுமையை பேணி வளர்க்கபடுகின்றோமா? அந்த பசுமையின் உன்னதத்தை நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கின்றோமா? என்றால் இல்லை. Play station, computer என்று வாங்கி கொடுத்து அதில் விளையாட சொல்லி கொடுத்து பெறுமை படும் அளவிற்கு இயற்கையோடும் பசுமையோடும் விளையாட சொல்லிக் கொடுப்பதுமில்லை, விடுவதுமில்லை.
நான் சிறுவனாய் இருக்கும் பொழுது ஆடி, ஆவணி மாதங்களில் வீட்டு தோட்டத்தில் அவரை, சுரை, பூசனி, தக்காளி , மிளகாய் விதைகளை இட்டு தினமும் தண்ணிர் ஊற்றி தினம் காலையில் எழுந்ததும் அதன் வளர்ச்சியை கண்டால் ஆணந்தம் வருமே! அந்த ஆணந்தம் அந்த குதுகுலம் நம் பிள்ளைகளுக்கு இருக்கின்றதா? காலையில் computer மதியம் play station மாலையில் கட்டாய படிப்பு இப்படியே அவர்களையும் நாம் வேலைசெய்யும் கணனியாகவே பயன்படுத்திவிட்டோம். இன்றோ அவர்களால் சிறு தோல்விகளை கூட சந்திக்க திரண் அற்றவர்களாக இருக்கின்றார்கள். உலகை பற்றிய சிந்தனை அவர்களுக்கு துளிகூட இல்லை. இந்த பூமியில் நான்கில் மூன்று பகுதி நீரால் சூழப்பட்டாலும் நமக்கு தேவையான நன்னீரின் அளவு சிறிதுதான். அதாவது 1% முதல் 2% வரைதான். பெருகிவரும் மக்கள் தொகை நன்னீரின் தேவை பற்றாகுறையாகவே இருக்கின்றது. போதா குறைக்கு இருக்கின்ற மரம் செடிகளை வெட்டி வீனாக்குவதே வேலையாகின்றது. என்றாவது ஒரு நாள் நம் கைகளால் ஒரு மரம் ஒரு செடி வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றதா? இந்த சுற்றுசூழல்கள் எல்லாம் இந்த மரம் செடிகளால் தான் தூய்மை படுத்தப்படுகின்றது, என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கின்றதா? அதனை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி தந்ததுண்டா?... இந்த பசுமையான எண்ணங்களை நம் பிள்ளைகளுக்கு விட்டு செல்லவில்லை என்றால் நாளைய உலகம் பூம்ம்ம்ம்ம்ம்ம்தான். ( "ஒரு நாள் இந்த பூமாதேவி சிரிப்பாள் நாமேல்லாம் போகவேண்டியதுதான், இது காமடியில்லை உண்மை")
உண்மைதான் நம் வாழ்க்கையில் சில மரங்களையாவது விட்டு செல்வோம். இல்லை நாங்கள் நகரங்களில் இருக்கின்றோம் என்றால் தோட்டிகளிலாவது செடிகளை வளர்க்க முயற்சி செய்வோம்.... நீங்கள் வளர்க்கும் மரம் செடிகள் நாளைய உலகிற்கு ஆணிவேர்.
"பசுமையை நாளைய சந்னதினருக்கும் கொண்டு செல்வோம்....." முதல் இரண்டு படங்கள் அதைதான் சொல்லுகின்றது. சுட்ட படங்களேல்லாம் சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா (Singapore Botanical garden).
கண்டதும் சுட்டதும்வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..
நான் பிறந்தது தஞ்சை மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம், பாரதிராஜா பார்க்கவில்லை பார்த்திருந்தால் எங்கள் ஊருக்கு நடிகர்கள் வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான்.