_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

தாயும்,... சேயும்.......

தாயும்,... சேயும்.....

டார்வின் கோட்பாடுபடி குரங்கிலிருந்து மனிதன் தோன்றிருக்கலாம் என்று பார்கின்றபொழுது... மனிதன் குரங்கு என பல ஒப்புமானங்கள் சரியாகவே தெரியும். எனக்கு பல சமயங்களில் ஒரு சந்தேகம் ஏற்படுவதுண்டு "குரங்கிலிருந்து மனிதன் தோன்றினானா? இல்லை மனிதனிடமிருந்து குரங்கு தோன்றிருக்க வாய்ப்பு இருக்கின்றதா?"..... எப்படியோ மனிதன் அறிவு வளர்ச்சியுடன் இருக்கின்றான். என்னதான் வளர்ச்சிகளை பார்த்தாலும் தாய் சேய் அன்புக்கு விஞ்ஞானம் சொல்ல முடியாது. அந்த அன்பை மருந்து மாத்திரை கொடுத்து உருவாக்கவும் முடிவதில்லை.........

கீழே ஒருத்தாய் தன் குழந்தைக்கு பாலுட்டும் அன்பு......( அன்பு செய்ய அறிவேல்லாம் தேவையில்லப்பா)




18 comments:

க.பாலாசி said...

அட நம்மளவிட அருமையா இருக்குங்க....

சத்ரியன் said...

ஞானம்,

இந்தப் படம் ஆயிரம் அர்த்தங்கள் கொண்டதல்ல. ஆயிரமாயிரம் அர்த்தங்கள் கொண்டது.

ஆ.ஞானசேகரன் said...

// க.பாலாசி said...
அட நம்மளவிட அருமையா இருக்குங்க....//

உண்மைதான் பாலாஜி.... உங்களின் வருகை மகிழ்ச்சி

ஆ.ஞானசேகரன் said...

//சத்ரியன் said...
ஞானம்,

இந்தப் படம் ஆயிரம் அர்த்தங்கள் கொண்டதல்ல. ஆயிரமாயிரம் அர்த்தங்கள் கொண்டது.//

வணக்கம் சத்ரியன்,..

மகிழ்ச்சியும் நன்றியும்

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

நட்புடன் ஜமால் said...

நெகிழ்வான படம் நண்பரே!

ஆ.ஞானசேகரன் said...

// நட்புடன் ஜமால் said...

நெகிழ்வான படம் நண்பரே!//
வணக்கம் ஜமால் மிக்க நன்றிங்க

கோவி.கண்ணன் said...

குரங்கிற்கும் தன் குட்டி தங்கக்கட்டி !

ஆ.ஞானசேகரன் said...

// கோவி.கண்ணன் said...

குரங்கிற்கும் தன் குட்டி தங்கக்கட்டி !//
வணக்கம் கண்ணன் உண்மையை டபக்குனு சொல்லிபுட்டீங்க

CorTexT (Old) said...

படங்கள் நன்றாக உள்ளது. உங்கள் கருத்துக்கள் அனைத்தும் தவறானது.

பூமி உருண்டையானது என்ற தியரி எப்படி நிருபிக்கப்பட்ட உண்மையோ, அப்படியே பரிணாமமும் உண்மை. அது சாதாரண மக்களுக்கு எளிதில் புரிவதில்லை அவ்வளவு தான். முடிந்தால் புரிந்து கொள்ள முயலுங்கள்.

http://sites.google.com/site/artificialcortext/special/putiya-parvai/uyir-entiram
http://sites.google.com/site/artificialcortext/special/putiya-parvai/uyir-moli-1

குரங்கிலிருந்து மனிதன் தோன்றவில்லை. குரங்கும் மனிதனும் பொதுவான இனத்திலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவை. ஏனென்றால் பரிணாமம் தொடர்ந்து நடைபெறும் ஒன்று. சரியாக சொன்னால், குரங்கும் மனிதனும் நெருங்கிய தொடர்புடையவை. கீழே உள்ள படத்தை பார்க்கவும். மனிதன் கொரில்லாவை (gorilla) விட சிம்ப்பன்சியுடன் (chimpanzee) மிக நெருங்கிய தொடர்புடையவன். புரிகின்றதா?

http://www.answersingenesis.org/assets/images/articles/ee/v2/apes-and-humans-tree.jpg

கீழே உள்ள படம் எப்படி உயிரினங்கள் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன, எவ்வாறு தொடர்புடையது என்பதை காட்டுகின்றது (கிளைகள் போல்).

http://upload.wikimedia.org/wikipedia/commons/3/30/Age-of-Man-wiki.jpg

அன்பை அறிவியலால் விளக்க முடியும். அன்பை சில வேதிபொருட்கள் மூலம் கூட்டவும் குறைக்கவும் அகற்றவும் முடியும் (மற்ற பல வழிகளும் உண்டு). அன்பு, காதல், பாசம், அடிமைதனம் எல்லாம் மூளையில் நடைபெறும் கட்டளைகளே. மனிதன் மற்றும் விலங்குகளில் அறிவு பரிணாம வளர்ச்சி அடைய, தாய்-அன்பு பரிணாம வளர்ச்சி தேவை. ஏன் என்பதற்கு கீழே சுட்டவும். புரிவதற்கு சற்று கடினமாக இருக்கலாம். புரிவதற்கு கடினமாக இருப்பதால், கண்டதையும் நம்பி கொண்டு இருக்க வேண்டாம். தேடி பாருங்கள்!

http://ecortext.blogspot.com/2010/04/sense-making.html

ஆ.ஞானசேகரன் said...

// RajK said...

படங்கள் நன்றாக உள்ளது. உங்கள் கருத்துக்கள் அனைத்தும் தவறானது.

பூமி உருண்டையானது என்ற தியரி எப்படி நிருபிக்கப்பட்ட உண்மையோ, அப்படியே பரிணாமமும் உண்மை. அது சாதாரண மக்களுக்கு எளிதில் புரிவதில்லை அவ்வளவு தான். முடிந்தால் புரிந்து கொள்ள முயலுங்கள்.///

நீங்கள் சொல்லும் கூற்று மிக சரியே,... இங்கு புகைப்படத்திற்க்காக மிகைப்படுத்தி எழுதியுள்ளேன் அவ்வளவே. உங்களின் சுட்டியும் பார்த்தேன் படித்தேன்..... அருமை மிக சிறப்பாக எழுதியுள்ளீர்கள் மிக்க நன்றி.....

Muniappan Pakkangal said...

Nice photos Gnanaseharan,Thaaimai ellarukkum pothuvaanathu,athu manithan aanaalum-miruham aanaalum.

ஆ.ஞானசேகரன் said...

//Blogger Muniappan Pakkangal said...

Nice photos Gnanaseharan,Thaaimai ellarukkum pothuvaanathu,athu manithan aanaalum-miruham aanaalum.//


நீங்கள் சொல்வதும் சரிதான் டாக்டர், மிக்க நன்றிங்க

ஹேமா said...

ஞானம் சுகம்தானே !நானும்கூட.

விடுபட்ட பதிவுகளோடு மனமும் இன்னும் ஒரு நிலைக்கு வராதபடியால் உங்கள் மறந்திருக்கிறேன்போல.என்னை தட்டிக் கூப்பிட்டதுக்கு நன்றி.

வெள்ளைப் புலி பார்க்கவே பயமாயிருக்கு ஞானம்.
உங்களிடமும் விடுபட்ட பதிவுகள் பார்க்கவேணும்.

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

ஞானம் சுகம்தானே !நானும்கூட.

விடுபட்ட பதிவுகளோடு மனமும் இன்னும் ஒரு நிலைக்கு வராதபடியால் உங்கள் மறந்திருக்கிறேன்போல.என்னை தட்டிக் கூப்பிட்டதுக்கு நன்றி.

வெள்ளைப் புலி பார்க்கவே பயமாயிருக்கு ஞானம்.
உங்களிடமும் விடுபட்ட பதிவுகள் பார்க்கவேணும்.//


வாங்க ஹேமா,..
மீண்டுன் சந்திப்பதில் மகிழ்ச்சி

ursula said...

அருமையா இருக்குங்க....

anbudan
ursualragav

அன்புடன் நான் said...

மனிதனில் இருந்து குரங்கு வந்திருக்க வாய்ப்பில்லை... குரங்க தாய் பால் கொடுக்குதுங்க ....

மனிதர்கள் தான் புட்டி பால் கொடுக்குறாங்க.

படைப்புக்கு பாராட்டுக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// சி. கருணாகரசு said...

மனிதனில் இருந்து குரங்கு வந்திருக்க வாய்ப்பில்லை... குரங்க தாய் பால் கொடுக்குதுங்க ....

மனிதர்கள் தான் புட்டி பால் கொடுக்குறாங்க.

படைப்புக்கு பாராட்டுக்கள்.//

நன்றி நண்பா

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket