புகைப்படத்தில் Blurred Background (Average)....
வணக்கம் வலை மக்களே!
சென்ற இடுகையில் புகைப்படத்தில் Blurred Background மற்றுமொரு உத்தி... பற்றி அறிந்துக்கொண்டோம். ஒரு புகைப்படம் நமக்கு தெளிவாகவும் அதே சமயம் புகைப்படம் மூலம் சொல்ல வந்த விடயம் சரியாகவும் இருக்க வேண்டும் என்பதே நாம் இங்கு புரிந்துக்கொண்டது. அப்படி தெளிவாக இருக்க தேவைக்கேற்ப பல உத்திகளை பயன் படுத்தப்படுகின்றது. அந்த வகையில் Blurred Background ம் ஒன்று. Blurred Background ல் ஒரு குறையாக தெரிவது தெளிவற்ற வண்ண அமைப்பு. பல நேரங்களில் அதுவும் ஒரு அழகுதான். சில இடங்களில் இந்த தெளிவற்ற வண்ண அமைப்பு இல்லாமல் ஒரே நிறமாகவும் அதே சமயம் அந்த பொருளுக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என்ற நிலையில் Blurred Background (Average)..... பயனாகின்றது. அவற்றைப் பற்றி இந்த இடுகையில் பார்க்கலாம்.
கீழேயுள்ள பறவை புகைப்படத்தை பார்க்கவும். இந்தப்படம் என்னுடைய canon 550D கேமராவில் எடுக்கப்பட்டது. இதன் பின்புறம் Blur ராக இருந்தாலும் சில வண்ணங்கள் கண்ணுக்கு தொந்தரவு கொடுப்பது போல இருக்கின்றது. அப்படி தொந்தரவு கொடுக்கும் வண்ணங்களை நீக்க... Blurred Background (Average)..... உத்தி பயனாகின்றது. அவற்றின் விளக்கங்களை பார்க்கலாம்..
மேற்கண்ட பறவை படத்தை Adobe Photoshop மூலம் திறந்துக்கொள்ளவும்.
பின்னர் pen tool லை பயன்படுத்தி பறவையை மட்டும் தேர்வு செய்துக்கொள்ளவும். விளக்கம் கீழ்யுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.
பறவையை தெர்வு செய்த பின் Select-> Inverse ஐ தேர்ந்தெடுக்கவும்.
இவ்வாறு Inverse ஐ தேர்வு செய்வதின் மூலம் பறவை அல்லாது பின்புறம் மட்டும் தேர்வாகியுள்ளது.
தேர்வாகியுள்ள பின்புறத்தை Average செய்வதன் மூலம் நமக்கு தேவையான பின்புறம் கிடைக்கின்றது. இவற்றை Filter -> Blur -> Average... சுட்டுவதன் மூலம் ......
தற்பொழுது நமக்கு பிடித்த அந்த படம் கிடைக்கின்றது. இவற்றை Deselect செய்து சேமித்து வைக்கவும்.
கீழே நீங்கள் பார்க்கும் படம்தான் அந்த முழுமையான புகைப்படம். இது அந்த அளவிற்கு வண்ணத்தின் உருத்தல் இருக்காது என்று நினைக்கின்றேன்.
அன்புடன்,
ஆ.ஞானசேகரன்....
உங்களின் விளக்கங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்...
புகைப்படத்தில் Blurred Background (Average)....
Posted by
ஆ.ஞானசேகரன்
on Monday, 2 August 2010
Labels:
DSLR,
photoshop..,
புகைப்படம்
வணக்கம் நண்பர்களே!
கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..
ஆ.ஞானசேகரன்
கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..
ஆ.ஞானசேகரன்
19 comments:
போட்டோ ஷாப் கத்துக்கனும்னு ஆர்வம் வந்துருச்சு
அருமையாக செய்து இருக்கிறீர்கள் நண்பரே!
// வால்பையன் said...
போட்டோ ஷாப் கத்துக்கனும்னு ஆர்வம் வந்துருச்சு//
வாருங்கள் சேர்ந்தே கத்துக்கலாம் நண்பா,...
// தேவன் மாயம் said...
அருமையாக செய்து இருக்கிறீர்கள் நண்பரே!//
நன்றி டாக்டர்....
மணற்கேணியில் நீங்கள் எடுத்த படங்களின் லின்க் கொடுங்கள்!
புகைப்படங்களைத் தொகுத்து ஒரு புத்தகம் போடலாம்!!
// தேவன் மாயம் said...
மணற்கேணியில் நீங்கள் எடுத்த படங்களின் லின்க் கொடுங்கள்!//
அது எனது அம்மா அப்பா தளத்தில் இருக்கின்றதே....
http://picasaweb.google.com/114955929532718467611/200903?authkey=Gv1sRgCKPS5qKr7YoE#
http://picasaweb.google.com/114955929532718467611/200902?authkey=Gv1sRgCPSS4rOi5q74WQ#
// தேவன் மாயம் said...
புகைப்படங்களைத் தொகுத்து ஒரு புத்தகம் போடலாம்!!//
அருமையான யோசனையாக இருக்கே...
போட்டோக்களின் சுட்டிகளுக்கு நன்றி ஞான்ஸ்!!
//தேவன் மாயம் said...
போட்டோக்களின் சுட்டிகளுக்கு நன்றி ஞான்ஸ்!!//
மகிழ்ச்சி... சார்
மெல்ல மெல்ல கத்துக்கலாம் போல் இருக்கு.
//போட்டோ ஷாப் கத்துக்கனும்னு ஆர்வம் வந்துருச்சு//
இப்படி ஒரு ஆசை வந்து ...//மெல்ல மெல்ல கத்துக்கலாம் போல் இருக்கு.//
ஆரம்பிச்சா ..
இதுவரை மண்டை காஞ்சதுதான் புண்ணியம்! அததுக்கு ஒரு 'மண்டை' வேணும் போலும்!!
:(
// தமிழ் உதயம் said...
மெல்ல மெல்ல கத்துக்கலாம் போல் இருக்கு.//
வாங்க நண்பா,.. தேவைப்பட்டால் கத்துக்கலாம்.....
[[ தருமி said...
//போட்டோ ஷாப் கத்துக்கனும்னு ஆர்வம் வந்துருச்சு//
இப்படி ஒரு ஆசை வந்து ...//மெல்ல மெல்ல கத்துக்கலாம் போல் இருக்கு.//
ஆரம்பிச்சா ..
இதுவரை மண்டை காஞ்சதுதான் புண்ணியம்! அததுக்கு ஒரு 'மண்டை' வேணும் போலும்!!
:(]]
வணக்கம் ஐயா...
எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளாவிட்டாலும் நமது தேவைக்கு கற்றுக்கொள்ளலாம் என்னைப்போல...
I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
நல்ல பதிவு. முயன்று பார்க்கிறேன். நன்றி ஞானசேகரன்.
// ராமலக்ஷ்மி said...
நல்ல பதிவு. முயன்று பார்க்கிறேன். நன்றி ஞானசேகரன்.//
மகிழ்ச்சியும் நன்றியும்ங்க
அன்பின் நண்பருக்கு இனிய வணக்கம்,
உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று இன்றைய வலைச்சரப் பதிவில் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!
[[ மாணவன் said...
அன்பின் நண்பருக்கு இனிய வணக்கம்,
உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று இன்றைய வலைச்சரப் பதிவில் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் ]]
நன்றி மாணவன், நன்றி வைகை
Post a Comment