பல வேலைகளில் நாம் எடுக்க நினைத்த காட்சியை விட அதன் பின் புறம் உள்ள நிகழ்வுகள் மற்றும் காட்சிகள் தெளிவாக வந்துவிடும். அதன் விளைவாக நாம் எடுத்த புகைப்படம் போற்றும்படியாக இருக்காது. இதை நாம் அழகுபடுத்த என்ன செய்யலாம்.....? இதற்கு photoshop மென்பொருள் பெரிதும் உதவுகின்றது.
அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். அதற்கு முன் கீழ் உள்ள புகைப்படத்தை கவணியுங்கள்

முதலில் மேற்கண்ட புகைப்படத்தை photoshop ல் திறந்துக்கொள்ளவும்.

பின்னர் ஒரு நகல் எடுத்துக்கொள்ளவும். அதன் பின்னர் pen tool எடுத்துக் கொண்டு மாதவை மட்டும் தேர்வு செய்யவும். கீழ்கண்ட படம் உங்களுக்கு விளக்கும்.

இப்பொழுது நமக்கு வேண்டி பகுதி மாதா மட்டும் தேர்வு நிலையில் இருக்கும். பின் select inverse ஐ சுட்டினால் மாதா பகுதியை தவிற்த்து மீதி பகுதி தேர்வாகி இருக்கும் . இவற்றில் விளக்கம் கீழ்யுள்ள படத்தில் பார்க்கலாம்..

இப்பொழுது தேர்வாகிய பின் புறத்தை தெளிவற்றவையாக மாற்றினால் மாதாவின் படம் தெளிவாக நமக்கு கிடைக்கும்... இதுதான் சூட்சமம்...

அவ்வாறு மாற்ற Filter மற்றும் Blur, lensBlur.... பகுதியை சுட்டவும்.... அவற்றின் விளக்கம் பின் உள்ள படத்தில் கவணிக்கவும்...

அவ்வாறு சுட்டினால் பின் வரும் விண்டோ கிடைக்கும். அவற்றில் Radius மற்றும் Amount மாற்றி பார்த்து ok வை கிளிக் பன்னவும்....

நான் இந்த படத்திற்கு. Radius 39, Amount 3 கொடுத்து ok கொடுத்தேன்.. அவ்வாறு கிடைத்த படம் இதுதான். கீழே பார்க்கவும்... பிடிந்திருந்தால் சொல்லுங்கள்.

இந்த படம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நினைக்கின்றேன்...... மேலும் சில படங்கள் கீழே உங்களுக்காக. இந்த படம் canon DSLR ல் எடுத்த புகைப்படம். இந்த படத்தில் Backgroun Blur உத்தி அந்த கேமராவிலேயே செய்தது. அவற்றையும் பின்னர் பார்க்கலாம்.. அதற்கு முன் புகைப்படத்தை கவணியுங்கள்.
எனக்கு தெரிந்த ஒரு உத்தியை சொல்கின்றேன்.... கேமராவில் Aperture Priority ஐ தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். இந்த மோடில் Aperture ஐ நாம் கொடுக்க வேண்டும். மேற்கண்ட உத்திக்கு லென்சின் விட்டம் பெரிதாக கொடுக்க வேண்டும்... அதாவது Aperture value சிறியதாக இருக்க வேண்டும். உதாரணமாக 4 முதல் 7 வரை கொடுக்கலாம்... அதே போல் லென்ஸ் 55 to 200 இருந்தால் நல்லது அதாவது focal length 70mm இருந்தால் நன்றாக இருக்கும்...
முயற்சித்து பார்த்து சொல்லுங்கள்.... உங்களின் ஊக்கம் மேலும் எழுத வைக்கலாம்...
அன்புடன்,
ஆ.ஞானசேகரன்...
19 comments:
அட போட்டோ தொழில்நுட்ப பதிவா, என் பாஸுக்கு ரொம்ப பிடிக்கும், அனுப்பிடுறேன்
மாதா மட்டுமல்ல. பறவைகள் கூட உங்களுக்காகவே நன்றாக போஸ் கொடுக்கின்றன.
நல்ல படங்கள் & பாடங்கள்!
பாடங்களைச் சேமித்துக் கொண்டேன்.
// வால்பையன் said...
அட போட்டோ தொழில்நுட்ப பதிவா, என் பாஸுக்கு ரொம்ப பிடிக்கும், அனுப்பிடுறேன்///
மிக்க நன்றி நண்பா,...
// தருமி said...
மாதா மட்டுமல்ல. பறவைகள் கூட உங்களுக்காகவே நன்றாக போஸ் கொடுக்கின்றன.
நல்ல படங்கள் & பாடங்கள்!
பாடங்களைச் சேமித்துக் கொண்டேன்.//
வணக்கம் ஐயா,... மிக்க நன்றி
மாதா அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு.பறவைகளின் படங்களும் அருமை. விளக்கங்களும் அருமை.வாழ்க வளமுடன்,
வேலன்.
பயனுள்ள பதிவு. சேமித்துக்கொண்டேன், நன்றி.
Cool Tip. :)
நல்ல பதிவு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
// வேலன். said...
மாதா அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு.பறவைகளின் படங்களும் அருமை. விளக்கங்களும் அருமை.வாழ்க வளமுடன்,
வேலன்.///
மிக்க நன்றிங்க வேலன்....
//அமைதிச்சாரல் said...
பயனுள்ள பதிவு. சேமித்துக்கொண்டேன், நன்றி.//
மகிழ்ச்சியும் நன்றியும் நண்பரே
// மகேஷ் : ரசிகன் said...
Cool Tip. :)//
நன்றிங்க மகேஷ்
//சசிகுமார் said...
நல்ல பதிவு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.///
உங்களின் வருகை மகிழ்ச்சி... மிக்க நன்றிங்க சசிகுமார்
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி.
Very nice info Gnanaseharan with Demo.
//மாதேவி said...
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி.
//
நன்றிங்க மாதேவி
//Muniappan Pakkangal said...
Very nice info Gnanaseharan with Demo.
//
மகிழ்ச்சியும் நன்றியும் சார்
பயனுள்ள பதிவு. நன்றி.
//ராமலக்ஷ்மி said...
பயனுள்ள பதிவு. நன்றி.//
நன்றி நன்றிங்க
நல்ல புகைப்படம் எடுப்பது எப்படி இனிமேல் தெளிவாக எடுக்க முடியும் , முடியவில்லை என்றால் மாற்றவும் முடியும் மிக்க நன்றி ......by satz.
Post a Comment