வெளிறிய நிறத்தை உருவாக்கும் அரியவகை மரபணுவுடன் கூடிய ஒருவகை அரிய புலியாகும். இதன் பூர்வீகம் இந்தியாவில் உள்ள வங்காளத்தில் இருக்கலாம் என்று எண்ணப்படுகின்றது. வக்காளத்திலிருந்து இரண்டு புலிகள் சிங்கப்பூர் மிருககாட்சி சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த இரண்டு வெள்ளைப் புலிகள்தான் கீழே காணும் புகைப்படம்.
வெள்ளைப் புலிகள் ஆரஞ்சு வகை புலிகளுடன் இனபெருக்கம் செய்யகூடியதாக இருக்கும். ஆனால் அதன் குட்டிகள் வெள்ளைப் புலியாக இருக்க 25 % தான் வாய்புள்ளது.
இந்தியாவின் தேசிய விலங்கு புலியாக இருந்தாலும் தற்பொழுது புலிகளை மிருககாட்சி சாலைகளில்தான் பார்க்க முடிகின்றது என்ற நிலை வருத்தப்படக்கூடியது. புலிகளின் தோலுக்காக கொல்லப்பட்டு வருவது வேதனையான விடயம். அரசும் இதற்கான சட்டப் பாதுக்காப்பு தரவேண்டும் என்பது எல்லோருடைய ஆசைகள்.....
வெள்ளைப் புலியைப் பற்றி மேலும் அறிய சுட்டியை சுட்டுங்கள் வெள்ளைப் புலி
டார்வின் கோட்பாடுபடி குரங்கிலிருந்து மனிதன் தோன்றிருக்கலாம் என்று பார்கின்றபொழுது... மனிதன் குரங்கு என பல ஒப்புமானங்கள் சரியாகவே தெரியும். எனக்கு பல சமயங்களில் ஒரு சந்தேகம் ஏற்படுவதுண்டு "குரங்கிலிருந்து மனிதன் தோன்றினானா? இல்லை மனிதனிடமிருந்து குரங்கு தோன்றிருக்க வாய்ப்பு இருக்கின்றதா?"..... எப்படியோ மனிதன் அறிவு வளர்ச்சியுடன் இருக்கின்றான். என்னதான் வளர்ச்சிகளை பார்த்தாலும் தாய் சேய் அன்புக்கு விஞ்ஞானம் சொல்ல முடியாது. அந்த அன்பை மருந்து மாத்திரை கொடுத்து உருவாக்கவும் முடிவதில்லை.........
கீழே ஒருத்தாய் தன் குழந்தைக்கு பாலுட்டும் அன்பு......( அன்பு செய்ய அறிவேல்லாம் தேவையில்லப்பா)
மைனாக்குருவியை பார்க்காதவர்கள் இருக்க முடியாது. காக்கைக்கு அடுத்தப்படியாக உலகெங்கிலும் இருக்கும் பறவை என்றால் அது மைனாதான். மைனா கருப்பு மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தில் இருப்பதால் அவ்வளவாக அழகு என்று சொல்லமாட்டார்கள்...... எனவே கேமரா கண்களுக்கு அதிகப்பச்சம் மாட்டுவதில்லை (தேன்ச்சிட்டுவை ஒப்பிடும்பொழுது). என் கண்ணில் பட்ட மைனாவின் சிலிர்க்கும் காட்சிதான் கீழேயுள்ள புகைப்படங்கள். மைனா சில நேரங்களில் தோகை விரித்தாடும் அந்த காட்சி என் கண்ணுக்கு சிக்கவில்லை, முடிந்தால் அடுத்த முறை பதிந்துவிடுகின்றேன்.
சின்ன சின்ன சேதி: காக்கை உலகெங்கிலும் இருக்கின்றது ஆனால் அந்தமான் தீவில் மட்டும் இல்லை. சிங்கப்பூரில் சுகாதாரம் மற்றும் சுத்தம் காரணமாக மட்டுப்படுத்தபட்டுள்ளது. பொதுவாக பறவை இனம் முட்டையிட்டு குஞ்சுப் பொரிக்கும் ஆனால் வவ்வால் குட்டி போட்டு பால் கொடுக்கும். வவ்வால் பழங்களை உண்ணும், பொதுவாக மரங்களில் தலைகீழாக தோங்கும் நிலையில் இருக்கும். (படம் பார்க்க).
மைனா மற்றும் காக்கைகள் மூலம் மனிதனுக்கு சில நோய்கள் பரவுகின்றதாக ஆய்வுகள் சொல்லப்படுகின்றது.
பொதுவாக பறவைகளுக்கு வேர்ப்பதில்லை ஏன் என்றால் பறவைகளுக்கு வேர்வை நாளங்கள் இல்லை. பறவைகளுக்கு அதன் அலகுதான் அழகும் ஆதாரமும்......
கண்டதும் சுட்டதும்வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..
நான் பிறந்தது தஞ்சை மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம், பாரதிராஜா பார்க்கவில்லை பார்த்திருந்தால் எங்கள் ஊருக்கு நடிகர்கள் வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான்.