தமிழ் திரைப்பட உலகில் முதல் முதலில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முழு நீளத்திரைப்படம் புரட்சி தலவர் டாக்டர் எம் ஜி ஆர், அவர்கள் நடித்து இயக்கிய "உலகம் சுற்றும் வாலிபன்" என்ற திரைப்படம். கதையே இல்லாமல் கதைக்களம் மட்டுமே பாத்திரமாக கொண்டு எடுக்கப்பட்டு முழு வேற்றியை கொடுத்தது. படத்தில் எம் ஜி ஆர்.. அவர்கள் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்வதாக காட்சிகள் வரும். அப்படி சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட காட்சிகளில் ஒரு பாடலும் உண்டு. அந்தப்பாடல் "சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிப்பில் வாழ்ந்திடாதே" என்பது. இந்த பாடல் சிங்கப்பூரில் உள்ள "ஹவ்பர் விலா (HAW PAR VILLA)" என்ற இடத்தில் எடுக்கப்பட்டது.
ஹவ்பர் விலா (HAW PAR VILLA) என்ற இடம் தலைவலி நிவாரணி டைகர் பாம் நிருவணத்தாரால் நிருவகிக்கப்பட்டு வருகின்றது. இந்த இடத்தில் சிமெண்ட் காரைகளால் செய்யப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை சித்தரிக்கும் சிலைகள் செய்து வைக்கப்பட்டுள்ளது. மிக பெரிய புத்தர் சிலையும் இருக்கின்றது. இன்றும் அதே நிர்வாகம்தான் நிருவகித்து வருகின்றது. இங்குள்ள விற்பனை நிலையத்தில் முதல் தரமான டைகர் பாம் கிடைக்கும்.
இத்துடன் "சிரித்து வாழவேண்டும்...." என்ற பாடலை இணைத்துள்ளேன். பாடலையும் பாடலில் வரும் இடங்களையும் கவணியுங்கள். குறிப்பாக நாகேஷ் அவர்களையும் அந்த குரங்கு சேட்டையும் கவணிக்க மறக்க வேண்டாம்.
எப்பொழுதுமே சிங்கப்பூர் ஒரு மிக சிறந்த சுற்றுலாத்தளமாக இருக்கின்றது. சிங்கப்பூரின் வளர்ச்சி பாதைக்கு இதுவும் ஒரு காரணிதான். அதேபோல் வரும் காலங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அதே சமையம் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருக்க வேண்டுமாய் அமைக்கப்பட்டு வரும் தளம்தான் சிங்கப்பூரின் ஆகாயத்தோட்டம் (மேரினா பே சாண்ட்ஸ்). இது ஒரு கேளிக்கை மற்றும் சுற்றுளா தளமாக இருக்கும்.
மெரினா பே கடலின் ஒரு பகுதியை தூற்று அதன் மேல் கட்டப்படும் மிக பெரிய தளம் என்பதுதான் இதன் மிக பெரிய சிறப்பு. அதே போல் மூன்று விடுதி தூண்களை இணைத்து கட்டப்பட்ட ஆகாய தோட்டம் அழகாக இருக்கும் என்பதற்கு சாட்சியம் கீழே இருக்கும் புகைப்படம்.... மேலும் மேரினா பே சாண்ட்ஸ் பற்றி தெரிந்துக்கொள்ள சுட்டியை தட்டுங்கள்...
(படத்தை பெரிதாக்கி பார்க்க படத்தை சொடுக்கவும்) Canon EOS 500D 24mm 1/60sec F/20 ISO 200 Aperture Priority
Canon EOS 500D 47mm 1/100sec F/20 ISO 200 Aperture Priority
ஆகாயத்தோட்டத்திற்கு அருகில் இருப்பதுMANDARIN ORIENTALகீழேயுள்ள புகைப்படம் . இந்த இடத்தை பகல், இரவை நோக்கி, இரவு என மூன்று நிலைகளில் எடுக்கப்பட்டது. பிடித்திருந்தால் ஏதாவது சொல்லிவிட்டு செல்லுங்கள்....
பகல்:
Canon EOS 500D 44mm 1/5sec F/8 ISO 200 Aperture Priority
இரவை நோக்கி:
Canon EOS 500D 43mm 2.5sec F/11 ISO 200 Aperture Priority
குட்டி குட்டி தட்டுகளில் குட்டி குட்டி மரங்களாக இருப்பவைதான் போன்சாய் மரங்கள். போன்சாய் என்பது சீன மொழியிலிருந்து வந்த ஜப்பானிய வார்த்தை. அழகுக்காகவே வளர்க்கப்படும் மிக பெரிய கலையாக இருக்கின்றது. இதனை வளர்க்க பொறுமை மிக அவசியம். 30 முதல் 100 ஆண்டுகள் வரையிலான மரங்கள் ஒரு குட்டி தட்டுகளில் வளர்க்கப்படுவது பார்க்க அழகாக இருக்கும். ரசித்து ரசித்து செய்யவேண்டிய கலை.
உண்மையில் போன்சாய் மரங்கள் குட்டையான மரங்கள் அல்ல, குட்டையாக வளர்க்கப்படுகின்றது. அதற்காக அந்த மரங்களை கொடுமை படுத்துவதாக இல்லை மாறக அதற்காக பக்குவ படுத்தப்படுகின்றது. எல்லா மரங்களைப்போல நீர், காற்று, உரம் எல்லாம் இடப்படும் ஆனால் வளர்ச்சியை மட்டும் கட்டுப்படுத்தி வளர்க்கப்படுகின்றது. இலைகளையும் வேர்களையும் அதற்காக அதிகமாகாமல் வெட்டி சீர் செய்யப்படுகின்றது. சிங்கப்பூரில் உள்ள சீனத்தோட்டத்தில் இதற்காக ஒரு சிறப்பு இடம் ஒதுக்கி வளர்க்கப்படுகின்றது. அனுமதி இலவசம் வாய்புள்ளவர்கள் சென்று பார்க்கலாம்...... புகைப்படங்கள் சிங்கப்பூர் சீனத்தோட்டத்தில் எடுத்தது.
ஆமையின் ஆயுள் காலம் 300 வருடம். ஆமையின் ஆயுள் காலம் அதிகமாக இருப்பதற்கு காரணம் அது குறைவாக சுவாசிப்பதால் என்று சொல்கின்றார்கள். ஆமை நிமிடத்திற்கு மூன்று முறை சுவாசிப்பதால்தான் அதன் ஆயுள் காலம் 300 ஆண்டுகளாக இருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. மனிதன் அவனின் அவசரம் ஆவேசம் காரணமாக தாறுமாறாக சுவாசிப்பதால் அவன் ஆயுள் காலம் தாறுமாறாக இருக்கின்றது. சுவாசிப்பதை கட்டுப்படுத்தி சீராக்கினால் வாழ்விற்காலமும் சீராகும்.....
Canon EOS 500D 171mm 1/1600 sec F/5.6 ISO 400 Aperture Priority
சுவாமி ஓம்காருக்கும் கேபிள் சங்கருக்குமிடையில் நடந்தது என்ன? குற்றமும் பின்னனியும்!....
கடந்த சிலநாட்களாக சிங்கையில் நடந்தது என்ன? சுவாமி ஓம்காருக்கும் கேபிள் சங்கருக்குமிடையில் என்ன பிரச்சனை?....... கானா பிரபு வந்து பிரச்சனையை தீர்த்தாரா? "குற்றமும் பின்னனியும்" சுட்டியை தட்டிப்பாருங்கள்.............
Canon EOS 500D 29mm 1/25 sec F/5 ISO 200 Aperture Priority sRGB
காப்பி என்பது Coffee என்ற ஆங்கில சொல்லின் தமிழ் வடிவம். தமிழில் கொட்டை வடி நீர் என்று சொல்லலாம். ஆனால் வழக்கில் காப்பி என்றே அழைக்கின்றோம். காப்பி ஆப்பிரிக்காவில் ஆடுமேய்க்கும் சிறுவர்கள் வழியாக கண்டுபிடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. காப்பி விளைச்சளில் உலகிலேயே இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளதாக தெரிகின்றது.
கண்டதும் சுட்டதும்வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..
நான் பிறந்தது தஞ்சை மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம், பாரதிராஜா பார்க்கவில்லை பார்த்திருந்தால் எங்கள் ஊருக்கு நடிகர்கள் வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான்.