_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

சிங்குமங்கு சிக்குமங்கு சச்சப்பாப்பா!..............

சிங்குமங்கு சிக்குமங்கு சச்சப்பாப்பா!..............


தமிழ் திரைப்பட உலகில் முதல் முதலில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முழு நீளத்திரைப்படம் புரட்சி தலவர் டாக்டர் எம் ஜி ஆர், அவர்கள் நடித்து இயக்கிய "உலகம் சுற்றும் வாலிபன்" என்ற திரைப்படம். கதையே இல்லாமல் கதைக்களம் மட்டுமே பாத்திரமாக கொண்டு எடுக்கப்பட்டு முழு வேற்றியை கொடுத்தது. படத்தில் எம் ஜி ஆர்.. அவர்கள் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்வதாக காட்சிகள் வரும். அப்படி சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட காட்சிகளில் ஒரு பாடலும் உண்டு. அந்தப்பாடல் "சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிப்பில் வாழ்ந்திடாதே" என்பது. இந்த பாடல் சிங்கப்பூரில் உள்ள "ஹவ்பர் விலா (HAW PAR VILLA)" என்ற இடத்தில் எடுக்கப்பட்டது.

ஹவ்பர் விலா (HAW PAR VILLA) என்ற இடம் தலைவலி நிவாரணி டைகர் பாம் நிருவணத்தாரால் நிருவகிக்கப்பட்டு வருகின்றது. இந்த இடத்தில் சிமெண்ட் காரைகளால் செய்யப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை சித்தரிக்கும் சிலைகள் செய்து வைக்கப்பட்டுள்ளது. மிக பெரிய புத்தர் சிலையும் இருக்கின்றது. இன்றும் அதே நிர்வாகம்தான் நிருவகித்து வருகின்றது. இங்குள்ள விற்பனை நிலையத்தில் முதல் தரமான டைகர் பாம் கிடைக்கும்.







இத்துடன் "சிரித்து வாழவேண்டும்...." என்ற பாடலை இணைத்துள்ளேன். பாடலையும் பாடலில் வரும் இடங்களையும் கவணியுங்கள். குறிப்பாக நாகேஷ் அவர்களையும் அந்த குரங்கு சேட்டையும் கவணிக்க மறக்க வேண்டாம்.

அன்புடன்
ஆ.ஞானசேகரன்


2 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு:)!

பாடலை இணைத்தது இன்னும் சிறப்பு.

ஆ.ஞானசேகரன் said...

// ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு:)!

பாடலை இணைத்தது இன்னும் சிறப்பு.//
வணக்கம் ராமலக்ஷ்மி

மிக்க நன்றிங்க

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket