_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

புகைப்படத்தில் Background (பின்ணனி)

புகைப்படத்தில் Background (பின்ணனி)

"சுவர் இருந்தால்தான் சித்திரம்" என்று சொல்லுவார்கள் அது போல ஒரு புகைப்படம் பார்ப்பவர்களை கவர்கின்றது என்றால் அதன் பின்புலமும் முக்கிய காரணியாக இருக்கும். அதனால்தான் புகைப்படம் எடுக்கும்பொழுது மிக முக்கியமாக கவணிக்க வேண்டியது அதன் பின்ணனி காட்சிகள். பின்ணனி காட்சிகளை படம் எடுக்கப்படும்பொழுது சரியாக அமையாவிட்டால் அதன் பின் காட்சிகளை "புகைப்படம் மென்பொருள்" மூலம் அதனை அழகுப்படுத்துவதும் உண்டு. அதற்கு பெரிதும் பயன் படுவது Adobe Photoshop என்ற மென்பொருள். அப்படி அழகுப்படுத்துவதை பற்றிய என் முந்தைய பதிவுகள்

புகைப்படத்தில் Blurred Background மற்றுமொரு உத்தி...
புகைப்படத்தில் Blurred Background (Average)....


மேலேயுள்ள சுட்டிகள் புகைப்படம் எடுத்த பின் அழகு படுத்துகின்ற உத்திகள். மேலும் பல பின்ணனி படங்களை சேர்ப்பதன் மூலமும் அழகுபடுத்தலாம். அப்படிப்பட்ட பின்ணனி படங்கள் இணையத்தில கொட்டிகிடக்கின்றது என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட பின்ணனி படங்களை பார்க்க கீழ்யுள்ள சுட்டியை சுட்டுங்களேன்.

பின்ணனி படங்கள்...


இந்த பகுதியில் புகைப்படம் எடுக்கும் பொழுதே பின்ணனியும் (Background) சிறப்பாக அமைய என்ன காரணிகள் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். Aperture லென்சின் விட்டத்தை பயன் படுத்தி பின்ணனியை சிறப்பாக்கலாம். அதே போல Shutter speed தேவையான அளவு அதிகப்படுத்தி சிறப்பாக எடுக்கலாம். Aperture value சிறிதாக்கி பின்ணனியை Blur ஆக்கலாம். அதேபோல் Shutter speed அதிகப்படுத்தும் பொழுதும் பின்ணனியை Blur ஆக்கலாம். மேற்கண்ட இரண்டு உத்திகளை விட சிறந்த ஒரு பின்ணனி (Background) என்னவென்றால் புகைப்படம் எடுக்கும் பொழுது நீர் நிலைகளையோ, ஆகாயத்தையோ பயன் படுத்தினால் சிறப்பாக இருக்கும். ஆகாயம் மற்றும் நீர்நிலைகளை போல சிறந்த பின்ணனி இல்லை என்றே சொல்லலாம். அதே போல தூரத்து இருள், தூரத்து பச்சையும் நன்றாக இருக்கும். இப்படி மேற்கண்ட உத்திகளை பயன்படுத்தி நான் எடுத்த புகைப்படங்கள் கீழே கொடுத்துள்ளேன்..... மேலும் விளக்கங்கள் தேவையெனில் பின்னூட்டங்களில் சொல்லுங்களேன்....


அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

20 comments:

Thekkikattan|தெகா said...

superb! i like the smoothness of DoF in the last picture :)

ஆ.ஞானசேகரன் said...

//Thekkikattan|தெகா said...
superb! i like the smoothness of DoF in the last picture :)
//

நன்றி நண்பா

ராமலக்ஷ்மி said...

படங்கள் அருமை.

தந்திருக்கும் சுட்டியிலுள்ள பதிவுகளும் பயனுள்ளவை. நன்றி.

தொடருங்கள். வாழ்த்துக்கள்.

தமிழ் உதயம் said...

படங்கள் பிரமாதம்!

ஆ.ஞானசேகரன் said...

// ராமலக்ஷ்மி said...

படங்கள் அருமை.

தந்திருக்கும் சுட்டியிலுள்ள பதிவுகளும் பயனுள்ளவை. நன்றி.

தொடருங்கள். வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

//தமிழ் உதயம் said...

படங்கள் பிரமாதம்!//

நன்றிங்க நண்பா

Anonymous said...

உங்கள் இடுகைக்கு ஸ்க்ரோல் செய்து வருவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது :(

மேலே உள்ள பாலோவர்களையும், சுயபுராணத்தையும் தூக்கி வலது புறம் சைடு பாரில் வைத்தால் வாசிக்க எளிதாக இருக்கும்.

ஆ.ஞானசேகரன் said...

// Anonymous said...

உங்கள் இடுகைக்கு ஸ்க்ரோல் செய்து வருவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது :(

மேலே உள்ள பாலோவர்களையும், சுயபுராணத்தையும் தூக்கி வலது புறம் சைடு பாரில் வைத்தால் வாசிக்க எளிதாக இருக்கும்.//

நன்றி நண்பரே... உங்களின் சிரமத்திற்கு வருந்துகின்றேன். இதை அனாலியாக சொல்லவேண்டிய அவசியம் இல்லை.. உங்களின் யோசனைகளை கவணத்தில் எடுத்துக்கொள்கின்றேன்.

Anonymous said...

நன்றி

venkat said...

படங்கள் supper

ஆ.ஞானசேகரன் said...

// Anonymous said...

நன்றி//

மகிழ்ச்சி

ஆ.ஞானசேகரன் said...

// venkat said...

படங்கள் supper//

மிக்க நன்றிங்க

வடுவூர் குமார் said...

எனக்கு அந்த குருவி ரொம்ப பிடிச்சிருக்கு.

ஆ.ஞானசேகரன் said...

// வடுவூர் குமார் said...

எனக்கு அந்த குருவி ரொம்ப பிடிச்சிருக்கு.//

நன்றிங்க குமார்

மாதேவி said...

படங்கள் அருமை.

ஆ.ஞானசேகரன் said...

//மாதேவி said...
படங்கள் அருமை.
//

மிக்க நன்றிங்க மாதேவி

thiyaa said...

பதிவு சூப்பர்
படங்கள் அருமை.

ஆ.ஞானசேகரன் said...

// தியாவின் பேனா said...

பதிவு சூப்பர்
படங்கள் அருமை.//

நன்றிங்க தியா

thiyaa said...

பயனுள்ள பதிவு படங்கள் அருமை.

ஆ.ஞானசேகரன் said...

// தியாவின் பேனா said...

பயனுள்ள பதிவு படங்கள் அருமை.//

மிக்க நன்றிங்க தியா

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket