_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

படம் சொல்லும் கதை (மண்டல அளவிளான கால்பந்து போட்டி-திருச்சி)

படம் சொல்லும் கதை (மண்டல அளவிளான கால்பந்து போட்டி-திருச்சி)

வணக்கம் நண்பர்களே!
திருச்சி மாவட்டம் துப்பாக்கித்தொழிற்சாலையில் நண்பர்கள் ஒன்றுப்பட்ட முயற்சியாக மணடல அளவிளான கால்பந்து போட்டி 2011 ஆகஸ்டு 18 முதல் 21 வரை மிக சிறப்பாக நடைபெற்றது. இதை பற்றி சென்ற வாரம் அம்மா அப்பா தளத்தில்
மண்டல அளவிளான கால்பந்து போட்டி(திருச்சி) ஒரு கண்ணோட்டம்...

பதிவிட்டுள்ளேன். இதைப் பற்றி அறிய மேலேயுள்ள சுட்டியை சுட்டி தெரிந்துக் கொள்ளலாம். அந்த நான்கு நாட்கள் நடந்த விளையாட்டுகளின் ஒரு சில புகைப்படங்கள் நான் எடுத்தேன். இது போன்று விளையாட்டை எடுப்பது எனக்கு இதுவே முதல் முறை அதில் சிலப்புகைப்படம் நன்றாகத்தான் இருக்கின்றது. அந்த புகைப்படங்களை உங்களோடு பகிந்துக்கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சியே!... அதேபோல் விளையாட்டுகளை புகைப்படம் எடுக்கும்பொழுது நாம் கவணிக்க வேண்டியவை என்ன? எப்படி புகைப்படம் எடுக்கலாம்? என்ற என் அனுபவங்களை உங்ளோடு பகிர்ந்தால் நல்லது என்று நினைக்கின்றேன். இது அன்று எனக்கு கிடைத்த அனுபவம் மட்டுமே....... மேலும் உங்களின் அனுபவங்களை இங்கே பகிர்ந்தால் நன்றாக இருக்கும்..... என்னை போன்று மற்றவர்களும் தெரிந்துக்கொள்வார்கள்.

கால்பந்து விளையாடும் வீரர்கள் மற்றும் பந்தின் வேகம் அதிகமாக இருக்கும்... அந்த நேரத்தில் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால்... நாம் கவணிக்க வேண்டியது ஒளி, மற்றும் வேகம். கேமராவின் கதவு வேகம் (shutter speed) குறைவாக எடுத்தால் அந்தப்படம் கலங்கலாகதான் வரும் ஏன் என்றால் ஆடுபவரின் கை கால்களின் வேகமும் தெரியும். அப்படியானால் (shutter speed) கதவின் வெகம் அதிகப்படத்த வேண்டும். ஆனால் கதவு வேகம் அதிகரிக்கும் பொழுது ஒளியின் அளவு குறைந்து படம் இருட்டாக இருக்கும். இது போன்று விளையாட்டுகளை புகைப்படம் எடுக்க கேமராவில் சிறப்பான ஒரு மோடையும் கொடுத்துள்ளார்கள். ஆனால் அதை பயன்ப்படுத்துவதில் ஒரு சிக்கல் ஒளியின் அளவு மாற்றம் கண்டபொழுது புகைப்படம் தெளிவாக கிடைக்காது.

ஒளி மற்றும் நிகழ்வு சரியாக வரவேண்டும் என்றால் நாம் (shutter priority ) தேர்ந்தெடுத்தால் நல்லது என்பது என் எண்ணம். அப்படிதான் அன்று shutter priority யை தேர்வு செய்தேன்.... shutter speed ஐ நாம் தேர்வு செய்தபின் கேமரா அதன் லென்சின் விட்டத்தை அதுவே தேர்வு செய்துவிடும்... ஒளியுன் அளவை கணக்கிட்டு லென்சின் விட்டத்தை கேமராவே தேர்வு செய்துக்கொள்ளும். அன்று அங்கு இருந்த தப்பவெப்பநிலைக்கு shutter speed 1/500 சரியாக இருந்தது. இந்த அளவு எல்லா நேரங்களிலும் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நீங்களும் செய்துப்பார்த்து கருத்துக்களை பகிர்ந்தால் எல்லோருக்கும் நன்மைக்கொடுக்கும்.

கீழே அன்று நான் எடுத்த புகைப்படங்கள் சில பதிந்துள்ளேன். மேலும் சிலப்புகைப்படம் இன்னும் சில தினங்களில் பதிவேன்... உங்களின் உண்மையான விமர்சனம்ங்களையும் மாற்றுக் கருத்துகளையும் தயங்காமல் சொல்லுங்களேன். உங்களுன் அனுபவங்களையும் சொன்னால் நல்லது.




































All Photos By
Lighthouse Photos

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் புகைப்படம்

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்

சுட்டவை சில தஞ்சை பெரிய கோவில்...


















மீண்டும் ....

ஆ.ஞானசேகரன்

குதிரை....

குதிரை....

நிலா.... இன்று வந்த அதே நிலா!

நிலா.... இன்று வந்த அதே நிலா!

இந்த வருடம் நாம் கண்ட சூப்பர் நிலா.... நாள் 19-03-2011
சுட்டவன்
ஆ.ஞானசேகரன்...
இந்த நிலா இதற்குமுன் 1912ல் வந்ததாம்...... நிலா அதன் சுற்றுப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வந்ததால் அதன் அளவை விட 14% அதிகமாக தெரியும் என்று விஞ்ஞானிகள் சொல்லுகின்றார்கள்.... சாதாரணமாக நம் கண்களுக்கு தெரிவதில்லை.... அன்று நான் சுட்டப்படங்கள் உங்களுக்காக...





போட்டோவை சுற்றி கோடு போட (Make borders on photo)..

போட்டோவை சுற்றி கோடு போட (Make borders on photo with Photoshop )..

வணக்கம் நண்பர்களே!
போட்டோ எடுக்காத நபர்களே இல்லை என்றே சொல்லலாம், அந்த அளவிற்கு போட்டோ நம்மிடையே கலந்துள்ள ஒன்றாகிவிட்டது. அந்த போட்டோ சிறப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோரிடமும் இருக்கின்றது. அப்படி சிறப்பாக இருக்க போட்டொவை சுற்றி வண்ணக்கோடு போடுவதும் உண்டு. அப்படிப்பட்ட கோடு photoshop மூலம் போடுவதைப்பற்றி இங்கே பார்க்கலாம்.

1. முதலில் தேவையான போட்டொவை photoshop ல் திறந்துகொள்ள வேண்டும்.

2. பின்னர் Image => Canvas size ஐ அமுக்கவும்...

3. Canvas size ஐ அமுக்கியதும் கீழ்கண்ட விண்டோ திறக்கும்...


4. Canvas size விண்டோவில் new size ல் நீல அகலங்களை பூர்த்தி செய்யவும் பின் வண்ணத்தையும் தேர்வு செய்து ok கொடுத்தால் கீழ்யுள்ள படத்தை போல வண்ண கோடு கிடைக்கும்.....


மேலும் உங்களுடன்
ஆ.ஞானசேகரன்...

சுட்டவை ( ரங்கோலி)

சுட்டவை ( ரங்கோலி)

நண்பனின் வீட்டில் போடப்பட்ட ரங்கோலி பகலில் மற்றும் இரவில்......



சுட்டவன் அன்புடன்,.......
ஆ.ஞானசேகரன்.
Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket