_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

19-11-2009 சுட்டது... பாதைகள்

19-11-2009 சுட்டது... பாதைகள்

என்னதான் அழகழகா சாலைகள் போட்டாலும் நடந்து செல்லுபவர்கள் அவற்றின் அருகே ஒரு குறுக்கு பாதை போட்டுவிடுவார்கள். எறும்பு ஊற கல்லும் தேய்ந்துவிடும் என்பதை போல மனிதன் நடந்து புல்லும் பட்டுவிடும். மனிதன் நடந்து நடந்து அந்த இடத்தில் புல்லும் வளராது, அப்படியே பல்லமாக போய்விடும். அப்படிதான் சிங்கப்பூரிலும் குறுக்காக நடந்து ஆங்காங்கே பாதைகளும் போட்டுவிடுவார்கள். இவ்வாறு உருவாகும் பாதைகளை இங்கே அரசும் தடுப்பதில்லை மாறாக அங்கே ஒரு நடைப்பாதை பொட்டு கொடுப்பார்கள்..... அப்படி போடப்பட்ட நடைப்பாதை புகைப்படங்கள்தான் கீழே கதை சொல்லுகின்றது. அப்படி போட்ட நடைப்பாதைக்கு அருகில் மற்றொரு குறுக்கு பாதையை உருவாக்கப்படும் என்பது மனிதனின் மற்றொரு வேடிக்கை.








அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

12 comments:

ராமலக்ஷ்மி said...

//அப்படி போட்ட நடைப்பாதைக்கு அருகில் மற்றொரு குறுக்கு பாதையை உருவாக்கப்படும் என்பது மனிதனின் மற்றொரு வேடிக்கை.//

வேடிக்கை மட்டுமல்ல வாடிக்கையும்:)!

படங்கள் நன்றாக உள்ளன.

ஆ.ஞானசேகரன் said...

[[ராமலக்ஷ்மி said...

//அப்படி போட்ட நடைப்பாதைக்கு அருகில் மற்றொரு குறுக்கு பாதையை உருவாக்கப்படும் என்பது மனிதனின் மற்றொரு வேடிக்கை.//

வேடிக்கை மட்டுமல்ல வாடிக்கையும்:)!

படங்கள் நன்றாக உள்ளன.]]


உண்மைங்க அது ஒரு வாடிக்கைதான்... மிக்க நன்றிபா

பிரபாகர் said...

சக்கரக்கட்டி, நேபாளி... எப்படிப்பா பாத்தீங்க... நினைக்கும் போதே டெரரா இருக்கு.

பிரபாகர்.

cheena (சீனா) said...

அன்பின் ஞானசேகரன்

படங்கள் அருமை - வாடிக்கையோ வேடிக்கையோ - நாம் மாற மாட்டோம் - மாறுவதற்கு காலம் பிடிக்கும்

நல்வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

//பிரபாகர் said...

சக்கரக்கட்டி, நேபாளி... எப்படிப்பா பாத்தீங்க... நினைக்கும் போதே டெரரா இருக்கு.

பிரபாகர்.//


வாங்க பிரபாகர்,... நன்றிபா

ஆ.ஞானசேகரன் said...

// cheena (சீனா) said...

அன்பின் ஞானசேகரன்

படங்கள் அருமை - வாடிக்கையோ வேடிக்கையோ - நாம் மாற மாட்டோம் - மாறுவதற்கு காலம் பிடிக்கும்

நல்வாழ்த்துகள்//

வணக்கம் ஐயா.... காத்திருக்கட்டும் காலம் நமக்காகவோ அல்லது நாம் காலத்திற்காகவோ... மிக்க நன்றி ஐயா..

இராகவன் நைஜிரியா said...

// அப்படி போட்ட நடைப்பாதைக்கு அருகில் மற்றொரு குறுக்கு பாதையை உருவாக்கப்படும் என்பது மனிதனின் மற்றொரு வேடிக்கை.//

அங்கேயுமா?

ஆ.ஞானசேகரன் said...

[[ இராகவன் நைஜிரியா said...

// அப்படி போட்ட நடைப்பாதைக்கு அருகில் மற்றொரு குறுக்கு பாதையை உருவாக்கப்படும் என்பது மனிதனின் மற்றொரு வேடிக்கை.//

அங்கேயுமா?]]

என்ன பன்னுறது இங்கேயும் மனிதர்கள்தானே! வாங்க நண்பா, மிக்க நன்றிங்க

அன்புடன் நான் said...

நல்லா இருக்கு நண்பா இந்த புதிய தளம்!

உங்க தேடுதலுக்கு இன்னும் ஒரு வலைதளம் கூட நிர்வகிக்கலாம்...வாழ்த்துக்கள்.

ஹேமா said...

இதேபோல ஒரு ஞாபகம் என் வீட்டிலும் ஞானம்.நான் இங்கு காலில் மண் ஒட்டாமல் நடந்து திரிகிறேன்.
ஊருக்குப் போகும் நேரத்திலாவது என் ஊர்க்காற்று.என் முற்றத்து மண் என்ற ஆசையோடு போவேன்.
அங்கிருப்பவர்களுக்கு அதன் ஏக்கம் புரியவில்லையோ என்னமோ.என் வீட்டிலும் அப்பா முற்றத்தில் இப்படிப் போட்டுவிட்டார்.நான் போன்நேரம் அப்பாவுக்கு நிறையச் சொல்லிச் சமாதானப்படுத்தி நடைகற்களை எடுத்துவிட்டு வந்தேன்.

ஆ.ஞானசேகரன் said...

//சி. கருணாகரசு said...
நல்லா இருக்கு நண்பா இந்த புதிய தளம்!

உங்க தேடுதலுக்கு இன்னும் ஒரு வலைதளம் கூட நிர்வகிக்கலாம்...வாழ்த்துக்கள்.//

வாங்க சி.கருணாகரசு,... உங்களின் வாழ்த்துதழுக்கும் பாராட்டுகளுக்கும் அன்பின் நன்றிகள்

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
இதேபோல ஒரு ஞாபகம் என் வீட்டிலும் ஞானம்.நான் இங்கு காலில் மண் ஒட்டாமல் நடந்து திரிகிறேன்.
ஊருக்குப் போகும் நேரத்திலாவது என் ஊர்க்காற்று.என் முற்றத்து மண் என்ற ஆசையோடு போவேன்.
அங்கிருப்பவர்களுக்கு அதன் ஏக்கம் புரியவில்லையோ என்னமோ.என் வீட்டிலும் அப்பா முற்றத்தில் இப்படிப் போட்டுவிட்டார்.நான் போன்நேரம் அப்பாவுக்கு நிறையச் சொல்லிச் சமாதானப்படுத்தி நடைகற்களை எடுத்துவிட்டு வந்தேன்.//

உங்களின் ஆசைகளும், ஏக்கமும் என்னால் புரிந்துக்கொள்ள முடியும்,... நானும் கொண்ட அனுபவங்களும் உண்டு. இப்படிப்பட்ட காரை தரைகளால் நிலத்தடிநீர் குறைகின்றது என்ற உண்மையும் உண்டு.... மிக்க நன்றி ஹேமா...

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket